ராஜ்குமார்
கன்னட திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்குமார் (கன்னடம்: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, ஏப்ரல் 24, 1929 — ஏப்ரல் 12,2006) பரவலாக அறியப்பட்ட கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவரின் ரசிகர்கள் அவரை "டாக்டர் ராஜ்", "நடசர்வபுமா", "அன்னாவரு" போன்ற செல்லப் பெயர்களால் அழைப்பார்கள்.
Remove ads
திரை மற்றும் மொழி
கன்னடத் திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராஜ்குமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பெதரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார். அவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் வேடன் கண்ணப்பா, பக்த மார்க்கண்டேயா மற்றும் குல கௌரவம். அவரது முதல் தமிழ்த் திரைப்படம் வெடன் கண்ணப்பா தனது சொந்த அறிமுக படமான பெடரா கண்ணப்பாவின் மறு ஆக்கம் ஆகும். அவரது தமிழ்த் திரைப்படங்களான பக்த மார்க்கண்டேயா மற்றும் குல கௌரவம் அவரது கன்னடத் திரைப்படங்களுடன் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. அவரது தமிழ்த் திரைப்படம் வெடன் கண்ணப்பா வெற்றி பெற்றது. அவரது சில திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டன
Remove ads
விருதுகள்
- 10 பிலிம்பேர் விருதுகள் (இது ஒரு நபர் அதிக விருதுகள் பெற்ற வரிசையில் இரண்டாவதாகும்)
- 9 முறை சிறந்த நடிகருக்கான மாநில விருதுகள்
- 1993ல் "சீவன சைத்திரா" திரைப்படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது
- 1983ல் கன்னடத் திரைப்படத்துறைக்கு இவரது பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்ம பூசன் விருது
- 1995ல் கன்னடத் திரைப்படத்துறைக்கு இவரது பங்களிப்பிற்காக தாதசாகிப் பால்கே விருது
- 1993ல் கர்நாடக அரசின் கன்னட ரத்னா விருது
- 1967ல் கர்நாடக அரசின் "நட சர்வபவ்மா" (நடிப்பு சக்கரவர்த்தி)
- 1985ல் கென்டுசுக்கி கலோனல் விருது (Kentucky Colonel award)
- 2002ல் என். டி. ஆர். தேசிய விருது
Remove ads
கடத்தல்
ராஜ்குமார் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டத்தில் உள்ள தொட்ட காசனூர் என்னும் ஊரில் பிறந்தார். அவர் நடிப்பை அரங்கத்தில் தொடங்கினார். 1945 ஆம் ஆண்டில் "பெதார கன்னப்பபா" என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார், மொத்தமாக 200 படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் ராஜ்குமார் "சந்தனக் கடத்தல்" வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[1]
இறப்பு
2006 ஆம் ஆண்டில் ஏப்ரல் 12ஆம் நாள் இதய நோயால் பெங்க்ளூரில் இறந்தார். இவர் இறந்த பின் பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் 8 நபர்கள், காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்[2]. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads