நெஞ்சில் ஓர் ஆலயம்
ஸ்ரீதர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஞ்சில் ஓர் ஆலயம் 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெற்றித்திரைப்படமாகும். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவிகா, வி. எஸ். ராகவன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும். இத்திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
இப்படம் பிரபல ஆங்கில படமான 'காசாபிளாங்கா’வின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாகும்.[2]
Remove ads
கதைக்கரு
காதலர்களான கல்யாண்குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.கல்யாணப் பரிசு திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குநர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.
Remove ads
நடிப்பு
பாடல்கள்
பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
மறுவாக்கம்
ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில் தில் ஏக் மந்திர் (1963) என்னும் பெயரில் இயக்குநர் ஸ்ரீதர் இந்தியில் இயக்கினார்.[6] குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் மானசி மந்திரம் (1966) என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னடத்தில் குங்கும ரக்சி என்னும் பெயரில் வெளியானது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads