புகழூர்க் கல்வெட்டு

From Wikipedia, the free encyclopedia

புகழூர்க் கல்வெட்டு
Remove ads

கரூர் மாவட்டத்தின் புகளூர் வட்டத்தின் தலைமையிடமான புகழூர் அருகே வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்தக் குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

Thumb
புகழூர்க் கல்வெட்டு

'புகள கல்வெட்டு' என்பது புகளூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இந்த கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.

இக் கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டுள்ள சேர மன்னர்கள், கோ ஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பவர்களாவர். இவர்களில் கோ ஆதன் சேரல் இரும்பொறையின் மகனே பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ பெருங்கடுங்கோவின் மகன். இக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.

Remove ads

கல்வெட்டு செய்தி

கல்வெட்டில் (பிராமி எழுத்துகளில்) இடம்பெற்றுள்ள செய்தி:

இதில் கூறப்படும் 'கோ அதன் செல் இரும்பொறை' என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப் பகுதிகள் 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இவனது மகன் பெயர் 'பெருங்கடுங்கோ' என்பது 'பாலை பாடிய பெருங்கடுங்கோ'வையும், இவன் மகன் 'இளங்கடுங்கோ' என்னும் பெயர் 'மருதம் பாடிய இளங்கடுங்கோ'வையும் நினைவூட்டுகின்றன.

இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு அளிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் தாமிழிக் கல்வெட்டுகளும் படுக்கைகளின் தலைமாட்டில் உள்ளன. அவை சிதைந்த நிலையில் இருந்தாலும் 'பிட்டன்', 'கொற்றன்' என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

படுக்கைத் தலைமாட்டில் கல்வெட்டுகள்

படுக்கைத் தலைமாட்டில் எந்தப் படுக்கையில் எந்த முனிவன் படுத்திருந்தான் என்று அவனது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தாவனூர் பிட்டன் கொற்றன், நல்லியூர் பிட்டந்தை மகள் கீரன் கொற்றி, நல்லியூர் பிட்டன் குறமகள் கீரன் கொற்றி, நத்தி, பெருங்கீரன், ஆதன், ஓரி உள்ளிட்ட சமணத் துறவிகளின் பெயர்கள் உள்ளன. படுக்கைகள் அமைத்துத் தந்தவர் என்று கொள்ளத்தக்க வகையில் எண்ணெய்-வணிகன், பொன்-வணிகன் என்னும் பெயர்களும் உள்ளன. படுக்கைகள் வழவழப்பாக இருக்க ஒருவகை மெழுகுடன் கூடிய வண்ணம் பூசப்பட்டுள்ளது. [1]

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

பார்வை

புகழூர்க் கல்வெட்டு மன்னர்கள்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads