காக்கத்தியர்

From Wikipedia, the free encyclopedia

காக்கத்தியர்
Remove ads

காக்கத்தியர்கள் (Kakatiya dynasty) ஆந்திர அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான ஆந்திர நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் ஆந்திரப் பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் பொ.ஊ. 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள்.[1] அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம் வாரங்கல் என அழைக்கப்படுகிறது. காகத்தியர்கள் ஆரம்பத்தில் சமண மதத்தைப் பின்பற்றியதாகவும் பின்பு காலப் போக்கில் சைவ சமயத்திற்கு மாறியதாகவும் வரலாறு உள்ளது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலைத்திருந்த பல அரச வம்சங்களுள் இதுவும் ஒன்று.

Thumb
காக்கத்திய முசுனுரி காப்பாணீடு நாயக்கர்
Thumb
ருத்திரமாதேவியால் 1261இல் கட்டப்பட்ட சிவன் கோயில் தோரண வாயில், வாரங்கல்
Remove ads

வரலாறு

பல கல்வெல்டுகள் காக்கத்தியர்களை தெலுங்கானாவைச் சேர்ந்த கம்மவார் இனத்திலுள்ள துர்ஜய வம்சத்தில், வல்லுட்டுல கோத்திரத்தில் தோன்றியவர்களாக கூறுகிறுது.[2][3]

Thumb
காக்கத்தியர்களின் கொடி

பிராமணர்கள் எழுதிய அஷ்டதச புராணங்களுள் ஒன்றான துருவாச புராணத்தில் உள்ளதாவது, காக்கத்திய மாமன்னர் பிரதாப ருத்திரர் கம்ம மகராஜ வம்சத்தில் பிறந்த ஒரு கம்ம இளவரசன். சில வரலாற்று அறிஞர்கள் காக்கத்தியர்களை கம்மவார்கள் என ஒப்புக்கொள்கின்றனர். இந்த காக்கத்தியர்கள் ஆதிகாலத்தில் நத்தவாட்டில் உள்ள நந்திகாமா எனும் இடத்திற்கு அருகில் உள்ள மகல்லு எனும் கிராமத்தில் இருந்து வாராங்கல் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்ததாக குறிப்புகள் உள்ளன. பொ.ஊ. 956ஆம் வருடத்தைச் சேர்ந்த சாளுக்ய தனராணவுடு கல்வெட்டு இதைச் சுட்டுகிறது. காக்கத்தியர்கள் சில நேரங்களில் ராஷ்ட்ரகுட கிராம தலைவர்களாக பணியாற்றியுள்ளனர், பின்பு சாளுக்யர்களுக்கு சமந்தராஜாக்களாகவும் பணியாற்றி உள்ளனர்.[4] முசுனுரி நாயக்கர்களும் கம்மவார் இனத்தில் உள்ள முசுனுரி குலத்தில் பிறந்தவர்களே.[5]

Remove ads

இராணி ருத்திரமாதேவி

Thumb
ருத்திரமாதேவி

ருத்திரமாதேவி பொ.ஊ. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.[6] இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி பொ.ஊ. 1280-ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.

எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். பொ.ஊ. 1291-இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். பொ.ஊ. 1295-இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.

Remove ads

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads