கம்மவார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கம்மவார் (Kammas) (கம்மவார் நாயுடு என்றும் கம்மவார் நாயக்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில், வேலூர்,‌ கிருஷ்ணகிரி, தேனி, கோவை, ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர், நாயுடு, ராவ், சௌதரி, ராயுடு மட்டும் ரெட்டி ஆகியன இவர்களின் பட்டங்களாகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...
Remove ads

வரலாறு

Thumb
About OpenStreetMaps
Maps: terms of use
30km
19miles
Pennar
Penna
Pennar
Pennar
Gundlakamma River
Gundlakamma
Gundlakamma River
Gundlakamma River
Konidena
Konidena
Konidena
Konidena
Ongole
Ongole
Chirala
Chirala
Chirala
Chirala
Addanki
Addanki
Addanki
Addanki
Bapatla
Bapatla
Bapatla
Bapatla
Vinokonda
Vinukonda
Vinokonda
Vinokonda
Narasaraopet
Narasaraopet
Sattenpalle
Sattenpalle
Sattenpalle
Sattenpalle
கம்மாநாடு

தற்போதைய கம்ம சமூகத்தினர், கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கம்மநாடு பகுதியில் விவசாயம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.[4][5] முந்தைய குண்டூர் மாவட்டத்தில் (பின்னர் 1970 இல் ஓங்கோல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட மூன்று துணை மாவட்டங்கள் இதில் அடங்கும்) குண்டலகம்மா நதிக்கும், கிருஷ்ணா நதிக்கும் இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, பண்டைய காலத்திலிருந்தே ஒரு அடையாளத்தைக் கொண்டிருந்தது. "கம்மா" என்ற சொல் இப்பகுதியின் எல்லைகளை உருவாக்கிய இரண்டு ஆறுகளைக் குறிக்கிறது[6] அல்லது இப்பகுதியில் ஒரு காலத்தில் பரவலாக இருந்ததாக நம்பப்படும் சங்ககம்மாக்கள் எனப்படும் புத்த மடாலய நிறுவனங்களைக் குறிக்கிறது.[7]

இப்பகுதி மக்கள் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததால், அவர்கள் பெரும்பாலும் கம்மா சமூகம் (கம்மா-குல) என்று குறிப்பிடப்பட்டனர். கம்மா-பிராமண, கம்மா-கோமதி, கம்மா-ஸ்ரேஷ்டி மற்றும் கம்மா-காப்பு போன்ற சொற்கள் கல்வெட்டுகளில் மக்களின் விளக்கங்களாக சான்றளிக்கப்பட்டுள்ளன.[8][9][10]

Remove ads

அரசியல்

ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு, புதிய தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, கம்மாக்களும், ரெட்டிகளும் மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தினர்.[11] 1953 முதல் 1983 வரை, பல கம்மாக்களும் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் தங்களை இணைத்துக் கொண்டு கட்சிக்கு நிதி மற்றும் ஊடக ஆதரவை வழங்கினர்.[12] 1980களில், தெலுங்கு தேசக் கட்சியை, அப்போதைய தலைவர் என். டி. ராமராவ் நிறுவினார். இதன் மூலம் அவர்கள் மாநில மற்றும் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தனர்.[13]

Remove ads

அரச மற்றும் தளபதி வம்சங்கள்

  • முசுனூரி நாயக்கர்கள்
  • பெம்மசானி நாயக்கர்கள்
  • ராவிள்ள நாயக்கர்கள்
  • சாயபனேனி நாயக்கர்கள்
  • சூர்யதேவர நாயக்கர்கள்

குறிப்பிடத்தக்க நபர்கள்

அரசியல்வாதிகள்

திரைப்படத்துறை

விளையாட்டுத்துறை

விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை

Remove ads

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads