காசாபிளாங்கா (திரைப்படம்)
மைக்கேல் கர்டிஸின் 1942ஆம் ஆண்டு திறைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசாபிளாங்கா (Casablanca) 1942 இல் வெளியான அமெரிக்கத் காதல்-நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் என்பவரால் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
1962 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் இப்படத்தின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாகும்.[1]
Remove ads
கதை
மொரொக்கோவின் தலைநகரான காசாபிளாங்காவில் கேளிக்கை விடுதியை நடத்திவரும் அமெரிக்கனான ரிக்கும் பாரிசில் அவனைச் சந்திக்கும் இல்ஸாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், இரண்டாம் உலகப் போரும், பிரான்ஸில் நாசிக்களின் ஆக்கிரமிப்பும் ஏற்பட்ட பிறகு அவர்கள் பிரிய வேண்டியுள்ளது. இல்ஸா ஏற்கெனவே விக்டரைத் திருமணம் செய்துகொண்டவள். ஆனால், நாஜிகளால் விக்டர் கொல்லப்பட்டிருப்பான் என்று கருதி ரிக்கின் துணையை நாடியிருந்ததுடன் அவனை உண்மையாகக் காதலிக்கவும் செய்கிறாள். ஆனால், விக்டர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுமே அவனுடன் காஸாப்ளாங்காவுக்குத் தப்பி வருகிறாள். தனது கேளிக்கை விடுதியில் அவர்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும் ரிக் அதிர்ச்சியடைகிறான். இல்ஸா அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். ஆயினும் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த காதல் உணர்வு தணியாமல் உள்ளது. உகார்தோ அவனிடம் கொடுத்திருந்த இரண்டு அனுமதிச் சீட்டுகள் அவனிடம் உள்ளன. அவை திருடப்பட்டவை என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றைத் தனது கேளிக்கை விடுதி பியானோவுக்குள் ஒளித்து வைத்திருக்கிறான் ரிக். அவை இரண்டையும் பயன்படுத்தித் தன்னுடன் இல்ஸாவை லிஸ்பனுக்கு அழைத்துச் செல்ல அவன் திட்டமிடுகிறான். ஆனால், இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட எத்தியோப்பியர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்திக்கொண்டு சென்றவனும் ஸ்பெயினில் ஜெனெரல் ஃப்ராங்கோவின் பாசிஸத்துக்கு எதிராகப் போர் புரிந்தவனுமான அவன் இறுதியில் காதலைத் துறந்து அந்த இரண்டு அனுமதிச் சீட்டுகளையும் விக்டருக்கும் இல்ஸாவுக்கும் கொடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு உதவுகிறான்.
Remove ads
விருதுகள்
அகாதமி விருதுகள்
வென்றவை
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads