காசிபாளையம் (ஈரோடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசிபாளையம் (Kasipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.
இது, 2011 ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணக்கப்பட்டு, மாநகராட்சியின் ஒரு மண்டலமாகச் செயல்படுகிறது. இந்த மண்டலத்தின் தலைமை அலுவலகம், மூலப்பாளையத்தில் அமைந்துள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் 4வது மண்டலம் சுமார் 26ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 1,38,000 மக்கள் வசிக்கின்றனர்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 52,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% பேர் ஆண்களும், 49% பேர் பெண்களும் ஆவர். காசிபாளையம் (ஈரோடு) மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காசிபாளையம் (ஈரோடு) மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
இங்குள்ள கோவில்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads