காசி யாத்திரை
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசி யாத்திரை (Kasi Yathirai) எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எஸ். எஸ். சேதுராமன் இப்படத்தை தயாரித்தார். வி.சி. குகநாதன் இந்த படத்தின் கதையை எழுதினார். சங்கர் கணேஷ் இசையமைக்க, குமாரி பத்மினி, ஜெயா, மனோரமா (இரட்டை வேடம்), எம். ஆர். ஆர் வாசு, சோ ராமசாமி, வி. கே. ராமசாமி , ஸ்ரீகாந்த், சுருளி ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]கமல்ஹாசன் இந்த படத்தில், தங்கப்பனின் கீழ் நடன உதவியாளராகப் பணிபுரிந்தார்.[1] திரையரங்குகளில் இத்திரைப்படம் 100 நாள்களுக்கு மேல் ஓடியது.[3]
Remove ads
நடிகர்கள்
- வி. கே. ராமசாமி - பரமசிவம் பிள்ளை
- மனோரமா - ஆண்டாள் (நாடக-நடிகை) / இலலிதா (சொக்கலிங்கத்தின் காதலி)
- சோ ராமசாமி -சொக்கலிங்கம் (சீதாவின் மாமா)
- ஸ்ரீகாந்த் - இராமு
- சுருளி ராஜன் - சங்கர் (இராமுவின் வீட்டு வேலைக்காரர்/ உமாவின் காதலன்)
- பி. ஜெயா - சீதா (இராமுவின் காதலர்)
- குமாரி பத்மினி - உமா (இராமுவின் சகோதரி)
- தேங்காய் சீனிவாசன் - கந்தசாமி (நாடக ஒப்பந்தக்காரர்)
- எம். ஆர். ஆர். வாசு - மாயாண்டி
- காந்திமதி - பார்வதி
- அப்பளச்சாரி - மார்கண்டேயன் சாஸ்திரி
- ஐ.ஆர்.ஆர் - முனியப்பன் (பரமசிவம் பிள்ளை உதவியாளர்)
- டைப்பிஸ்ட் கோபு (பரமசிவம் பிள்ளை குருஜி)
Remove ads
கதைச்சுருக்கம்
பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் பரமசிவம் பிள்ளை (வி. கே. ராமசாமி) ஊருக்குத் திரும்புகிறார். இராமு, உமாவின் சித்தப்பா பரமசிவம் பிள்ளை ஆவார். பரமசிவம் பிள்ளை பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதால், தன் அண்ணன் மகனையும் மகளையும் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறார். மாறாக, இராமு சீதைவைக் காதலிக்க, உமாவும் வேறொரு ஆணைக் காதல் செய்கிறார்கள். சித்தப்பா பரமசிவத்தின் அனுமதியைப் பெற சங்கரின் (சுருளி ராஜன்) உதவியை நாடுகிறான் இராமு. சங்கரும் சமையல்காரனாக வேடமிட்டு பரமசிவத்தைத் தன் வசப்படுத்த முயற்சித்தும் தோல்வியைச் சந்திக்கிறான். அதனால், மனோரமாவின் உதவியுடன், பரமசிவத்திற்கு ஒரு மொட்டைக் காதல் கடிதம் எழுதி அனுப்புகிறான் சங்கர். பரமசிவத்தின் உதவியாள் அந்தக் காதல் கடிதத்தை அவருக்கு படித்துக் காட்டுகிறான். அதைச் சற்றும் பிடிக்காதவாறு நடந்துகொண்டாலும், அந்த கடிதத்தில் இருக்கும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பரமசிவத்திற்கு எழுகிறது. அதன் பின்னர் ஏற்படும் சம்பவங்களை மிகவும் நகைச்சுவையாகப் படமாகியிருந்தார் இயக்குநர்.
Remove ads
படக் குழுவினர்
- இயக்குநர் : எஸ். பி. முத்துராமன்
- தயாரிப்பாளர் : எஸ்.எஸ். சேதுராமன்
- கதை : வி.சி. குகநாதன்
- இசை : சங்கர் கணேஷ்
- பாடல் : வாலி மற்றும் பஞ்சு அருணாசலம்
- ஸ்டுடியோ : பரணி பிக்சர்ஸ் மற்றும் கற்பகம்
- தயாரிப்பு : தேவி சினி ஆர்ட்ஸ்
- கலை : ராதா
- செட்டிங் : டி.வி. குமார் மற்றும் சி. சந்திரன்
- செயலாக்கம் : ஆர். பரமசிவம் ( ஏவிஎம் திரைப்பட ஆய்வகம்)
- ஸ்டில்ஸ் : எஸ். ஏ. அழகப்பன்
- விளம்பரம் : சத்தியம்
- பாடல் ஒலிப்பதிவு : கிருஷ்ண ராவ் (ஜெமினி) மற்றும் டி. எஸ். ரங்காசாமி (சாரதா)
- உரையாடல் ஒலிப்பதிவு: எஸ். ராமா ராவ் (பரணி), பி.வி.நாதன் மற்றும் ஜி. கந்தசாமி (கற்பகம்)
- வெளிப்புறம் : ஏ. பி. ஆர்.
- நடனம் : தங்கப்பன், மதுரை ராமு மற்றும் கமல்ஹாசன்
- பொருட்கள் : நியோ ஃபிலிமோ கிராஃப்ட்ஸ்.[4]
இசை/பாடல்கள்
இப்படத்தின் இசையை சங்கர் கணேஷ் இசையமைத்தனர். வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதினர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads