சின்னக் குக்குறுவான்

From Wikipedia, the free encyclopedia

சின்னக் குக்குறுவான்
Remove ads

கழுத்தறுத்தான் குருவி (White-cheeked Barbet) அல்லது சின்னக் குக்குறுவான் என்பது தென்னிந்தியாவில் மேற்குமலைத்தொடர்ப் பகுதிகளில் காணப்படும் ஒரு குக்குறுவான். இது மிகவும் பரவலாக காணப்படும் பச்சைக் குக்குறுவான் போன்றது. ஆனால் இந்த இனம் ஒரு தனித்துவமான புருவக்கோடு மற்றும் கண்ணுக்கு கீழே கன்னத்தில் ஒரு வெள்ளைப் பட்டை கொண்டுள்ளது. மேலும் இவை மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதிகளில் காணப்படுகிறது. மற்ற அனைத்து குக்குறுவான்களைப் போலவே, இவை முக்கியமாக பழந்தின்னிகள் (இவை சில சமயங்களில் பூச்சிகளை உண்ணலாம்). இவை மரங்களில் பொந்து தோண்டுவதற்கு இவற்றின் அலகுகளைப் பயன்படுத்துகின்றன.

விரைவான உண்மைகள் சின்னக் குக்குறுவான், காப்பு நிலை ...
Remove ads

வகைப்பாட்டியல்

இதன் உயிரியற் பெயர் மெகாலைமா விர்டீசு (Megalaima viridis). இதன் உயிரியற் பெயரில் வரும் விர்டீசு (viridis) என்னும் சொல் பச்சை நிறத்தைக் குறிப்பதாகும். சின்னக் குக்குறுவான் குருவி ஒருவாறு பச்சைக் குக்குறுவான் (என்னும் பச்சைக்குருவியுடன் தொடர்புடையது. சின்னக் குக்குறுவானின் (கூவலும்) பச்சைக் குக்குறுவான் கூவலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும் (வலப்புறம் உள்ள ஒலிக்கோப்பைச் சொடுக்கிக் கேட்கவும்).

Thumb
கேரளாவில் திரிசூரில் காணப்பட்ட கழுத்தருத்தான் குருவி; இதன் பச்சை நிறம் இலைகளோடு ஒன்றி இருப்பதைப் பார்கக்லாம்.
கழுத்தறுத்தான் குருவியின் குயிலல் (கூவும் குரல்)
Remove ads

விளக்கம்

சின்னக் குக்குறுவான் 16.5–18.5 செமீ (6.5–7.3 அங்குலம்) நீளம் கொண்டது. அலகு அடிப்பகுதி ஊன் நிறமாக இருக்கும். விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பச்சை நிறத்திலும் இருக்கும். தலையும் பிடரியும் பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். மோவாய் வெண்மையாகவும், தொண்டை, கழுத்து, மேல் மார்பு ஆகியன பழுப்பு நிறத்தில் இருக்கும். கீழ் மார்பும், வயிறும் பச்சை நிறமாகவும், வாலின் அடிப்பகுதி நீலந் தோய்ந்த பசுமை நிறத்தில் இருக்கும்.

Remove ads

பரவலும் வாழிடமும்

இவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந் பகுதிகளிலும் சேர்வராயன், சித்தேரி ஆகிய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.[2][3]

நடத்தையும் சூழலியலும்

இந்திய பறவையியலாளர் சாலிம் அலி இப்பறவைகள் இனப்பெருக்க காலத்தில் சில பறவைகளாக இரவில் அழைப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் இது மற்ற பறவை நோக்கர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது, இவை மற்ற காலங்களிலும் அழைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

உணவு

சின்னக் குக்குறுவான் மரங்களில் வாழ்கிற பறவையாகும். அரிதாகவே இவற்றை தரையில் காண இயலும். தனக்கு தேவைப்படும் நீர்சத்தை பழங்களில் இருந்தே பெறும். மரங்களில் காணப்படும் குழியில் தண்ணீர் கிடைக்கும் போது, இவை சில சமயங்களில் அதில் குடித்து குளிக்கும்.[4]

இப்பறவைகள் பழங்களை உண்டு வாழ்பவை என்றாலும், இவை இறக்கையுள்ள கரையான்கள் மற்றும் பிற பூச்சிகளை சந்தர்ப்பவசமாக உண்ணக்கூடியவை. இவை வெள்ளால் போன்ற அத்தி இனத்தின் பழங்களை உண்கின்றன.[5] மேலும் தேன் பழம் போன்ற அறிமுகபடுத்தபட்ட தாவரங்களின் பழங்களையும் உண்கின்றன. உணவு தேடும் போது இவை மிகவும் ஆக்ரோசமானவை மற்றும் குயில் போன்ற பிற பழந்தின்னிகளை துரத்த முயற்சிக்கும்.[3][6]

சின்னக் குக்குறுவான்கள் காடுகளில் விதைகளைப் பரப்புவதில் முதன்மை இடத்தை வகிக்கின்றன.[7][8][9] இவை முள்ளிலவு பூக்களில் தேன் குடிக்கவும் பார்க்கிறன. மேலும் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடபடக்கூடும்.[2]

இனப்பெருக்கம்

Thumb
Small Green Barbet
Thumb
கூட்டின் வாயிலிலில் இருந்து எட்டிப்பார்க்கும் பெரிய பறவை

பெரியாற்றுத் தேசியப் பூங்காவில், சின்னக் குக்குறுவான் திசம்பரில் இனப்பெருக்கத்தைத் துவக்குகின்றன மே மாதம் வரை கூடு கட்டுகின்றன. இனப்பெருக்கத்தின்போது இவை தீவிரமாக ஒலி எழுப்புகின்றன. பாலுறவுக்கு முன் பெண் பறவைக்கு ஆண் பறவை உணவளிப்பது வழக்கம். முட்டைகள் குஞ்சு பொரித்த பிறகு இவற்றின் அழைப்பின் தீவிரம் குறைகிறது.[10] மரங்களில் உள்ள காய்ந்த கிளைகளில் மரங்கொத்தியைப் போலப் பொந்து குடைகின்றன. இரு பாலினப் பறவைகளும் சேர்ந்தே பொந்தை குடைகின்றன. கூடு அமைக்கும் பணி முடிய 20 நாட்கள் ஆகும். கூட்டை குடைந்த பிறகு சுமார் 3-5 நாட்களுக்கு முட்டைகள் இடப்படுகின்றன. சுமார் 3 முட்டைகள் இடப்படுகின்றன. அடைகாக்கும் காலம் 14 முதல் 15 நாட்கள் ஆகும். பகலில் இரு பாலினங்களும் அடைகாக்கும், ஆனால் இரவில், பெண் பறவை மட்டுமே முட்டைகளில் அமர்ந்திருக்கும். சில நேரங்களில் முட்டைகளை வேட்டையாடும் பனை அணில்களிடமிருந்து இந்த ஜோடி தங்கள் கூடுகளைப் பாதுகாக்கும். குஞ்சுகளுக்கு பூச்சிகள் நிறைந்த உணவு அளிக்கப்படுகிறது. குஞ்சுகள் 36 முதல் 38 நாட்களுக்குப் பிறகு கூட்டை விட்டு வெளியேறுகின்றன.[10]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads