காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Katpadi Junction, நிலையக் குறியீடு:KPD) தமிழ்நாட்டின் வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள 20இற்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் தொடருந்து நிலையங்களில் காட்பாடி தொடருந்து நிலையமும் ஒன்றாகும். கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.

Remove ads
இட அமைப்பு
இந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் தொடருந்து நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் தொடருந்துகள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150இற்கும் அதிகமான பயணிகள் தொடருந்துகள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன. தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் தொடருந்துகள் முதன்மையாக இயக்கப்படுகின்றன.[1][2]
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 329 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11]
Remove ads
வசதிகள்
- ஐ.ஆர்.சி.டி.சி மூலம் பராமரிக்கப்படும் உணவுத் தளம் 1 மற்றும் 2 தளங்களில் அமைந்துள்ளது.
- நடைமேடை 1, 2 மற்றும் 3 தளங்களில் ஆவின் பால் சாவடி, காபி ஷாப்பிங், ஹோட்டல், புக் ஸ்டால் மற்றும் பழ ஸ்டால்கள் வரை புதுப்பித்தல் கடைகளும் உள்ளன.
- கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் நடைமேடை 1, 2, 3 மற்றும் 5 ஆகிய இடங்களில் உள்ளன.
- ஏ.டி.எம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது.
- டிஜிட்டல் போர்டு நடைமேடை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் வந்து செல்லும் தொடருந்துகளின் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இட அமைப்பு உடன் காட்டுகிறது.
- பார்சல் முன்பதிவு அலுவலகம், இரயில்வே அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) ஆகியவை இருக்கின்றன. உயரக மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் காத்திருக்கும் அறைகள் நடைமேடை 1, 2 மற்றும் 3ல் உள்ளன.
- பெண்களுக்கான தனி காத்திருக்கும் மண்டபம்.
- இந்த நிலையத்தில் நடைமுறையில் முன்பதிவற்ற பயணிகளுக்கான ஐந்து நுழைவுச்சீட்டு சேவை முகப்புகள் உள்ளன. நீண்ட தொலைவு இரயில்களுக்கான ஏழு முன்பதிவு சேவைமுகப்புகள் (கவுன்டர்கள்) தனி கட்டிடத்தில், இரயில் நிலையத்தில் முதன்மை நுழைவாயிலில் அமைந்துள்ளது.
- இரயில்வே காவல் நிலையம் (RPF) நடைமேடை எண்.1 இல் அமைந்துள்ளது.
- பயணிகளின் பாதுகாப்புக்கு, தெற்கு இரயில்வே எல்லா தளங்களிலும் கேமராக்களை நிறுவியுள்ளது.
- நடைமேடை 1இல் ஒரு CMC மருத்துவமனை உதவி மையம் செயல்படுகிறது.[12]
போக்குவரத்து
காட்பாடி நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே தொடருந்து நிலையத்தை இணைக்கும் பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.
பயணிகள்
சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திப்புக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள், வேலூருக்கு வருகை தருகின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads