காட்மியம் அயோடைடு

From Wikipedia, the free encyclopedia

காட்மியம் அயோடைடு
Remove ads

காட்மியம் அயோடைடு (Cadmium iodide), CdI2, காட்மியம் மற்றும் அயோடின் ஆகியவற்றாலான ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அதிக இரசாயன முனைவுத்தன்மை கொண்ட MX2 வகைச் சேர்மங்களின் வகைமாதிரிக்கான  இதன் படிக அமைப்பிற்காக அறியப்படட்டது ஆகும். 

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

பயன்கள்

காட்மியம் அயோடைடானது கல்லச்சுக்கலை, ஒளிப்படவியல், மின் முலாம் பூசுதல் மற்றும் பாசுபோர்கள் தயாரிப்பு ஆகியவற்றில் பயன்படுகிறது.[2]

தயாரிப்பு

காட்மியம் அயோடைடானது, காட்மியம் உலோகம் அல்லது அதன் ஆக்சைடு அல்லது அதன் கார்பனேட்டு இவற்றில் ஏதாவது ஒன்றுடன் ஐதரயோடிக் அமிலத்தை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இச்சேர்மமானது, காட்மியத்தை அயோடினுடன் சேர்த்து வெப்பப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படலாம்.

படிக அமைப்பு

காட்மியம் அயோடைடில் அயோடைடு எதிரயனிகள் அறுங்கோண வடிவுடைய ஒரு மூடப்பட்ட அமைப்பை உருவாக்குகின்றன. காட்மியம் நேரயனிகள் அறுங்கோணத்தின் ஊடான இடங்களை அடுத்தடுத்த அடுக்குகளில் ஆக்கிரமிக்கின்றன. இதன் விளைவாக கிடைக்கின்ற அமைப்பானது அடுக்கடுக்கான படிகக்கூடு ஆகும். இதே அடிப்படையான அமைப்பே பல உப்புகள் மற்றும் கனிமங்களில் காணப்படுகிறது. காட்மியம் அயோடைடானது மிகுதியாக அயனிப்பிணைப்புத் தன்மையுடனும் பகுதியளவு சகப் பிணைப்புத் தன்மையுடனும் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads