காதர்பாட்சா முத்துராமலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (Katharbatcha Muthuramalingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராகவும் உள்ளார்.[1]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
முத்துராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி மற்றும் ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகன் ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
முத்துராமலிங்கம் 1996 முதல் 2016 வரை தொடர்ந்து 4 முறை மேலராமநதி ஊராட்சி ஒன்றிய தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 51.88% வாக்குகளுடன் இராமநாதபுரத்திலிருந்து (மாநில சட்டமன்றத் தொகுதி) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3] இவர் 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இவர் ஆறாவது மாநில நிதி ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads