காத்திருக்க நேரமில்லை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காத்திருக்க நேரமில்லை 1993 ஆம் ஆண்டு கார்த்திக், சிவரஞ்சனி, குஷ்பூ ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், குலோத்துங்கன் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம். கார்த்திக் இரு வேடங்களில் நடித்த திரைப்படம்.[1][2][3]

விரைவான உண்மைகள் காத்திருக்க நேரமில்லை, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

இராஜு (கார்த்திக்) மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் (சின்னி ஜெயந்த், வடிவேலு, தியாகு) அனாதைக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக பணக்காரர்களிடமுள்ள சட்டத்திற்குப் புறம்பான கருப்புப் பணத்தைத் திருடுபவர்கள். இந்த நால்வரும் குற்றவாளிகள் என்று டி. ஐ. ஜி. மோகன்ராஜிற்கு (ராஜேஷ்) தெரிந்தாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களைக் கைது செய்ய இயலாத கையறு நிலையில் இருக்கிறார். மோகன் ராஜின் மகள் ராதிகா (சிவரஞ்சனி) ராஜூவை காதலிக்கிறார். அவர்களின் காதலை ஏற்க மறுக்கும் மோகன்ராஜ், ராதிகாவை காவல்துறை அதிகாரியான அஜித்திற்கு (உதய் பிரகாஷ்) மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். ஒருநாள் ராஜு அஜித்தைக் கொன்றுவிடுகிறார். அங்கேவரும் மோகன்ராஜ் கொலை நடந்த இடத்தில் ராஜூவைப் பார்க்கிறார்.

கடந்தகாலம் : கொலை செய்தவர் ராஜு இல்லை. ராஜூவைப் போல முகத்தோற்றம் கொண்ட சோமசேகர். அவரும் பவானியும் (குஷ்பூ) காதலித்துத் திருமணம் செய்கின்றனர். சட்டர்ஜி (நாசர்) சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்பவர். சட்டர்ஜி சோமசேகருக்குச் சொந்தமான சொத்துகளை வாங்க முயற்சிக்கிறார். அவருடைய தவறான தொழில்களைப் பற்றி அறியும் சோமசேகர் அவருக்குத் தன் சொத்துகளை விற்க மறுக்கிறார். இதனால் ஆத்திரம் கொள்ளும் சட்டர்ஜி அவரது ஆள்கள் மூலம் பவானியைக் கொல்கிறார். அந்தத் தாக்குதலில் பலத்தக் காயமடையும் சோமசேகர் தன் பெண் குழந்தையுடன் தப்பிக்கிறார். சில ஆண்டுகள் கழித்து அவருடைய பெண் குழந்தையை அஜித் கடத்துகிறார்.

தன் கதையை சொல்லிமுடிக்கும் சோமசேகர் தான் இன்னும் 2 பேரைக் கொல்லப்போவதாகக் கூறுகிறார். சோமசேகருக்கு உதவ முடிவு செய்கிறார் ராஜு. கடத்தப்பட்ட சோமசேகரின் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்கள். தன்னுடைய பெண் குழந்தையை வளர்க்கும் பொறுப்பையும், தன் சொத்துகளையும் ராஜூ வசம் ஒப்படைக்கிறார் சோமசேகர். சட்டர்ஜியைக் கொன்று அவரும் இறக்கிறார்.

Remove ads

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி, புலமைப்பித்தன்.[4][5]

மேலதிகத் தகவல்கள் வ.எண், பாடல் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads