காபோங் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காபோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kabong; ஆங்கிலம்: Kabong District; சீனம்: 卡邦区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் ஒரு மாவட்டமாகும்.[1]
இந்த மாவட்டம், பெத்தோங் மாவட்டம், சரதோக்கு மாவட்டம், பூசா மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பெத்தோங் பிரிவில் ஒரு மாவட்டமாகும். பெத்தோங் பிரிவில் மூன்றாவது பெரிய மாவட்டமாகத் திகழ்கிறது.[2]
Remove ads
பொது
காபோங் மாவட்டம் முழு மாவட்டமாகத் தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, சரதோக்கு மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. ஏறக்குறைய 398.14 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3]
காபோங் மாவட்டத்தை காபோங் மாவட்ட அலுவலகம் மற்றும் காபோங் மாவட்ட மன்றம்; ஆகிய நிர்வாக அமைப்புகள் நிர்வகிக்கின்றன. காபோங் மாவட்டத்தில் உள்ள குடியேற்றத்தில் 26 இபான் நீள வீடுகள் மற்றும் 27 மலாய் கிராமங்கள் உள்ளன.[4]
காபோங் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும்; நீள வீடுகள் அரசாங்கத்தின் பிரதிநிதியான ஒரு பழங்குடித் தலைவரால் (Ketua Kampung; Tuai Rumah) கண்காணிக்கப்படுகின்றன.
பெத்தோங் பிரிவு மாவட்டங்கள்
பெத்தோங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads