காப்பிட் மாவட்டம்

சரவாக் மாநிலத்தில் ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

காப்பிட் மாவட்டம்map
Remove ads

காப்பிட் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kapit; ஆங்கிலம்: Kapit District; சீனம்: 加帛区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; காப்பிட் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தை ராஜாங் ஆறு ஊடுருவிச் செல்கிறது.[2][3]

விரைவான உண்மைகள் காப்பிட் மாவட்டம், நாடு ...

இந்த மாவட்டத்தில் இபான் சமூகத்தவர் ராஜாங் ஆற்று பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாவட்டத்தின் தலைநகரமான காப்பிட் நகரத்தில், 1800-ஆம் ஆண்டுகளில் இருந்து நீள வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

Remove ads

பொது

Thumb
காப்பிட் மாவட்டத்தின் வரைபடம்

காப்பிட் மாவட்டம் போர்னியோவின் உட்பகுதியில் இருப்பதால், முன்னர் காலத்தில் ராஜாங் ஆற்று வழியாகத்தான் அங்கு செல்ல முடியும். இப்போது புது தார் சாலைகளை அமைத்து இருக்கிறார்கள்.[4]

இந்த மாவட்டம் சிபு நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. விரைவுப் படகு மூலம் செல்லலாம். 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும். இலகுரக விமானம் மூலமாகவும் செல்லலாம். கார் மற்றும் பேருந்தில் செல்ல சுமார் 1 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும்.

Remove ads

வரலாறு

வெள்ளை இராஜா சார்லஸ் புரூக் மன்னரின் ஆட்சியின் போது, 1880-ஆம் ஆண்டில், காப்பிட் பகுதியில் ’காப்பிட் கோட்டை’ (Fort Kapit) கட்டப்பட்டது. இந்தக் கோட்டை கட்டப் படுவதற்கு முன்னர் இபான் மக்கள் ஆற்றின் வழியாகச் சென்று ஒராங் உலு (Orang Ulu) மக்களைத் தாக்கி வந்தனர். கோட்டை கட்டப்பட்டதும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.[5]

கோட்டையின் பாதுகாப்பினால், கோட்டையைச் சுற்றி இருந்த பகுதிகளில், 1880-இல் சீனர்கள் (Hokkien Chinese) படிப்படியாகக் குடியேறினர்.

1924-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டையில், இபான் மற்றும் ஒராங் உலு மக்களுக்கு இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. இதனால் இரு பழங்குடி மக்களுக்கும் இடையிலான பல நூறு ஆண்டுகள் பகைமை நிரந்தரமான முடிவிற்கு வந்தது.[6]

ராணியார் சில்வியா கோட்டை

Thumb
ராணி சில்வியா புரூக் கோட்டை

1925-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டை, ராஜா சார்லசு வைனர் புரூக்கின் மனைவி ராணி சில்வியா புரூக்கின் (Rani Sylvia Brooke) நினைவாக, ’சில்வியா கோட்டை’ (Fort Sylvia) என மறுபெயரிடப்பட்டது.[5] இந்தக் கோட்டை 1887, 1934, 1961 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளையும் தாங்கி நின்றது.[6]

28 ஜனவரி 1934-இல், காப்பிட் வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ராஜாங் ஆற்றின் நீர் மட்டம் 162 அடி (49 மீ) வரை உயர்ந்தது.[5]

ஜப்பானியர் ஆக்கிரமிப்பு

1941-ஆம் ஆண்டில், ஜப்பானியர் ஆக்கிரமிப்பின் போது (Japanese Occupation), காப்பிட்டில் 37 கடைவீடுகள் கொண்ட இரண்டு வரிசைகள் இருந்தன. போரின் போது நேச நாடுகளின் குண்டுவீச்சினால் காப்பிட் நகரம் முற்றிலும் அழிந்தது.

1973 ஏப்ரல் 2-ஆம் தேதி, சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவாகக் காப்பிட் மேம்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் சில்வியா கோட்டையில், காப்பிட் மாவட்ட அலுவலகம்; காப்பிட் நீதிமன்றம் இருந்தன. 1973-க்குப் பிறகு, அது காப்பிட் பிரிவின் அலுவலகமாக மாற்றப் பட்டது.[7]

Remove ads

சான்றுகள்

இவற்றையும் பார்க்க

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads