காப்புக்காடு
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காப்புக்காடு (Kappukadu) என்பது தென்தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பண்டைய ஊராகும். இவ்வூரில் பழந்தமிழ்ப் புலவர் தொல்காப்பியர் பிறந்ததாக நம்பப்படுவதால் இது காப்பியங்காடு எனவும் வழங்கப்படுகிறது. இங்குத் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.[3]
காப்புக்காடு 1 ச. கி. மீ. பரப்பளவு கொண்டதாகும். புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளி ஊரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 5000 அளவுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்த ஊர் நாகர்கோயில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை 47-இல் 2 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊர் கன்னியாகுமரியையும் கொச்சியையும் இணைக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை தொடர்ச்சியில் இருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊரின் இருபுறப் போக்குவரத்துக்கும் முன்மொழியப்பட்டுள்ள திருவனந்தபுரம்-கன்னியாகுமரி விரைவு நெடுஞ்சாலைக்கும் முதன்மையானதாகும்.
ஊரில் நெல்வயல்களும் தென்னைமரங்களும் சூழ்ந்துள்ளன. ஊரின் ஒருபக்கம் சிறுமலைகளும் தண்பொருநை ஆறும் மறுபக்கம் பாறைகளும் உள்ளன. மிக அருகில் 1 கி. மீ. தொலைவில் குழித்துறை தொடருந்து நிலையமும் 2 கி. மீ. தொலைவில் மார்த்தாண்டம் நகரியமும் உள்ளன. இங்குள்ள மக்கள் தமிழும் மலையாளமும் கலந்து ஈழப்பாணித் தமிழில் பேசுகின்றனர். முன்பு இது கேரளாவில் இருந்தது. விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட்டது.
Remove ads
பள்ளிகள்
- புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளி
- ஆர்த்தெசியா பதின்மப் பள்ளிவிக்னேசுவரா பதின்மப் பள்ளி
- அரசு நடுநிலைப்பள்ளி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
