காப்ராவின் பிரமிடு

From Wikipedia, the free encyclopedia

காப்ராவின் பிரமிடுmap
Remove ads

காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre)[2] (அரபி: هرم خفرع, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார்.[5] இந்த பிரமிடு கீசா நகரத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் மன்னர் காப்ராவின் பிரமிடு, மன்னர் காப்ராவின் பிரமிடு, கீசா ...
Thumb
மன்னர் காப்ரா கட்டிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்
Thumb

இப்பிரமிடிவின் அடிப்பாகம் 215.5 மீட்டர் நீளமும் (706 ft) மற்றும் 136.4 மீட்டர்கள் (448 அடி) உயரமும் கொண்டது.[2]. இப்பிரமிடின் ஒவ்வொரு கல்லும் 2 டன் கொண்ட சுண்ணக்கல்லில் கட்டப்பட்டது. இதனருகில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மற்றும் மன்னர் கூபுவின் பிரமிடும் உள்ளது.

எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, மன்னர் காப்ராவின் பிரமிடு திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 - கிமு 1213) கட்டளையின் படி, காப்ராவின் பிரமிடின் பெருங்கற்களைக் கொண்டு ஹெலியோபோலிஸ் நகரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்.

Thumb
காப்ராவின் பிரமிடின் உட்புறக் காட்சி மற்றும் செல்லும் வழி
Thumb
மன்னர் காப்ராவின் கல்லறைக் கோயிலின் 16 தூண்கள் கொண்ட மண்டபம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads