இரண்டாம் ராமேசஸ்
‘பிரவுன்’ என்ற பரம்பரை பெயரில் கிப்தி இனத்தினர் ஆட்சி செய்தார்கள். அந்த வரிசையில் 11-வது அரசனாக From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் ராமேசஸ்[3][4] [5]) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். பண்டைய எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எகிப்தின் மன்னராக ஆட்சிபுரிந்தார். [6]தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 சேத் திருவிழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு. மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை எகிப்தியவியல் அறிஞர்கள் ராமேசியம் காலம் என்பர். முதலாம் சேத்தியின் மகனான இரண்டாம் ராமேசசின மனைவி பெயர் நெபர்தரி ஆகும்.

இவர் பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் உள்ள மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டு பேரரசு மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியா பகுதிகள், மற்றும் லிபியா பகுதிகளை வென்றவர்.
இவர் எகிப்தை ஆண்ட முதல் வம்ச மன்னர்கள் முதல் 18-ஆம் வம்ச பார்வோன்களின் பெயர்கள் வரை, பாபிரஸ் எனும் காகிதத்திலும், அபிதோஸ் கோயில் சுவரின் கற்பலகையில் குறுங்கல்வெட்டுகளாக பொறித்து வைத்தார். அவைகளை துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் என்பர்.
Remove ads
நிறுவிய கட்டிடங்கள்
பார்வோன் இரண்டாம் ராமேசஸ் பண்டைய அபிதோஸ், கர்னாக், அல்-உக்சுர், பை-ராமேசஸ் போன்ற நகரங்களில் அபு சிம்பெல் கோயில்கள், இரண்டாம் ராமேசஸ் சிலை, ராமேசியம் வளாகங்களை அமைத்தார்.

இரண்டாம் ராமேசசின் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடத் தொகுதிகள் பின் வருமாறு;
Remove ads
பார்வோன்களின் அணிவகுப்பு
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]

Remove ads
படக்காட்சிகள்
- குழந்தை இரண்டாம் ராமேசஸ்
- நூபியாவைக் கைப்பற்றியதன் நினைவுச்சின்னம்
- இட்டைட்டுகளின் கோடைடை வென்றதன் சித்திரங்கள்
- இட்டைட்டு மன்னரும், இரண்டாம் ராமேசஸ் செய்து கொண்ட ஒப்பந்தம்
- நூபியர்களுக்கு எதிரான போரில் தேரில் செல்லும் இரண்டாம் ராமேசஸ்
- நூபியாவின் ஜெர்ப் உசைன் கோயில்
- இரண்டாம் ராமேசசுடன் அமூன் மற்றும் மூத் கடவுளுடன் ராமேசஸ் சிற்பம்
- அல்-உக்சு கோயிலில் இரண்டாம் ராமேசஸ் சிற்பம்
- இராணி நெபர்தரியின் சுவர் சித்திரம்
இதனையும் காணக்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads