காமவர்த்தனி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காமவர்த்தனி கருநாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என்று பெயர்.
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.
சிறப்பு அம்சங்கள்
- இது ஒரு பழமையான இராகம்.
- காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்.
- கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- தாரச்தாயி காந்தாரத்திற்கு மேல் சஞ்சாரம் காண்பதரிது.
- ஜண்டசுர வரிசைப் பிரயோகங்கள், தாட்டு சுரப்பிரயோகங்கள், பிரத்தியாகத கமகங்கள் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
- பண்டைத்தமிழிசையில் "சாதாரிப்பண்" என்றழைக்கப்பட்டது. "நட்டராகம்" என்றும் அழைக்கப்பட்டது.[1]
- மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கி என்ற முதல் மேளமாகும்.
Remove ads
உருப்படிகள்
- கிருதி : ஈசனே கோடி : மிஸ்ர சாபு : முத்துத் தாண்டவர்.
- கிருதி : ரகுவர நன்னு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : குஞ்சித பதத்தை : ரூபகம் : கோபாலகிருஷ்ண பாரதியார்.
- கிருதி : சிவ சிவ என : மிஸ்ர சாபு : தியாகராஜர்.
- கிருதி : விசாலாட்சம் : மிஸ்ர சாபு : முத்துஸ்வாமி தீட்சிதர்.
ஜன்ய இராகங்கள்
காமவர்த்தனியின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்
காமவர்த்தனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்:
- ஏழு ஸ்வரங்களுக்குள் - அபூர்வ ராகங்கள் (ஒரு புறம் பார்த்தால் என்ற வரிகளைத் தவிர)
- நின்னைச் சரணடைந்தேன் - பாரதி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads