காரைக்கால் மாவட்டம்

புதுச்சேரியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

காரைக்கால் மாவட்டம்map
Remove ads

காரைக்கால் மாவட்டம் (Karaikal district) ஆனது புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில், இது பரப்பிலும், மக்கள் தொகையிலும் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கி.மீ. பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது காரைக்கால், திருமலைராஜன்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.

விரைவான உண்மைகள் காரைக்கால், நாடு ...
Remove ads

வரலாறு

1787 மற்றும் 1791-ஆம் ஆண்டுகளில், காரைக்கால் விவசாயிகள் பிரெஞ்சுக்காரர்கள் விதித்த கடும் நில வரிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 1857-இல் இந்த கிளர்ச்சி பிரெஞ்சு குடியேற்றங்களில் ஒரு விளைவைக் கொடுத்தது. ஆனால் அது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனெனில் சம்பவங்கள் குறைவாகவும் உள்ளூர் நிகழ்வாகவும் ஆட்சியாளர்களால் கருதப்படுகின்றன. பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதற்கு, மக்கள் சட்ட வழிகளைப் பயன்படுத்தினர். 1873-ஆம் ஆண்டில், ஒரு வழக்கறிஞர், பொன்னுதம்பி பிள்ளை, பாரிஸ் நீதிமன்றத்தை தனது காரணத்தை உறுதிப்படுத்தினார். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பிரெஞ்சு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், காலணிகளுடன் நடந்து சென்றதற்காக அபராதம் விதித்த வழக்கில் அவர் வெற்றி பெற்றார்.[2]

1927 மற்றும் 1930-ஆம் ஆண்டுகளில் மாணவர் ஆர்ப்பாட்டங்கள், பிரெஞ்சு நாட்டு ஆட்சி முடிவுக்கு வர உதவின. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பால் கங்காதர் திலக் போன்ற தலைவர்கள் பாண்டிச்சேரி மற்றும் அதன் பிற இடங்களுக்குச் சென்று கூட்டங்களில் உரையாற்றினர். 1934-ஆம் ஆண்டில், ஸ்வதந்திரம், ஒரு மாத, மூத்த சுதந்திர ஆர்வலரும், தொழிற்சங்கத் தலைவருமான வி. சுப்பையா அவர்களால் தொழிலாளர்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. தொழிற்சங்க அமைதியின்மைக்கு உத்தரவாதம் அளித்த, பொலிஸ் கட்டுப்பாடு, காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தை மேலும் அதிகரித்தது. 1930-இன் பிற்பகுதியில், பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் மகாஜன சபாக்கள் என்று அழைக்கப்படும் அடிமட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டன. இந்த குழுக்கள், தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்பாடு செய்தன. இரண்டாம் உலகப் போரின்போது, புதுச்சேரி ஆண்கள் மற்றும் பொருட்களுடன் பிரான்சு நாட்டை ஆதரித்தது. பிரெஞ்சு-இந்திய வீரர்களிடையே ஏற்பட்ட மரணங்கள் அந்த இடங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தின. இந்த அமைதியின்மையும், இந்திய பிரெஞ்சு அரசை வலுவிழக்கச் செய்தது.

Remove ads

தோற்றம்

2005-ஆம் ஆண்டு ந. ரங்கசாமி முதல்வாராக இருந்தபோது, அதற்கு முதல்கட்டமாக காரைக்காலைத் தனி வருவாய் மாவட்டமாகும் என புதுவை அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது காரைக்கால் நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக டாக்டர் சுந்தரவடிவேலு பொறுப்பேற்றார். அவர் ஏற்கனவே, காரைக்கால் பகுதியின் நிர்வாகியாகப் பொறுப்பில் இருந்தார்.[3] காரைக்கால் நகரம் 1739-ஆம் ஆண்டுக்கு முன்பு, தஞ்சை அதாவது இன்றைய தஞ்சாவூர் (Tanjore) மன்னரான ராஜா பிரதாப் சிங் கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களிடமும், சில ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்களிடமும் மாற்றம் அடைந்துகொண்டே இருந்தது. இறுதியில் ஒரு உடன்படிக்கையில் 1816/1817 ஆண்டுகளில் பிரஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1954 நவம்பர் ஒன்றாம் (1st November 1954) தேதி வரை காரைக்கால் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலேயே இருந்ததெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Remove ads

புவியமைப்பு

காரைக்கால் மாவட்டம் 160 சதுர கிலோமீட்டர் (62 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

அமைவிடம்

காரைக்கால் ஆனது முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு சிறிய கடலோரப் பகுதியாகும். காரைக்கால் மாவட்டத்திற்கு வடக்கே மயிலாடுதுறை மாவட்டமும், தெற்கே நாகப்பட்டினம் மாவட்டமும், மேற்கில் திருவாரூர் மாவட்டமும் (இவைகள் தமிழ்நாடு ஆகும்), கிழக்கில் வங்காள விரிகுடாவும் உள்ளது. பாண்டிச்சேரி நகருக்கு தெற்கே 132 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம் அதன் கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. திருநள்ளாறு என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகையில் 49.01% நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 2,00,314 ஆகும். இங்கே தமிழ் மொழியே பெரும்பாலோரின் மொழியாகும். பிரெஞ்சும் சிலரால் பேசப்படுகிறது. இலங்கை தமிழர்களும் இங்கு வசிக்கிறார்கள்.

திருநள்ளாறு

திருநள்ளாறு என்பது காரைக்கால் மாவட்டத்தில் உள்ள, ஒரு கொம்யூன் பஞ்சாயத்து ஆகும். இது காரைக்கால் நகரில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநள்ளாறு செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன. திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது, சனிக்கிழமைதான். நவக்கிரகக் கோயில்களில் சனிக்கிரகத்திற்கான சனிஸ்வரன் ஆலயம் இந்த ஊரில்தான் உள்ளது. எனவே, வெளியூர் பயணிகள் அருகில் உள்ள நகரமான காரைக்காலுக்கு பயணம் செய்வதே சிறந்தது. இதற்கு அடுத்த கட்டமாக, உள் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு, கும்பகோணம் சாலை ஒரு நல்ல வழியாகவும், அதிகம் பயன்படுத்துப்படுவதாகவும் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில், திருநள்ளாறு அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் வழியாகவும், இந்த ஊரினை அடைய வழிகள் உள்ளன.[4]

Remove ads

காரைக்கால் அம்மையார் கோவில்

காரைக்காலில் 63 நாயன்மார்கள் உள்ள ஒருவரான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் வாழ்ந்தார். சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட அம்மையார் வாழ்ந்த இடம் காரைக்கால் மாநகர். இங்கு உள்ள அம்மையார் கோவிலில் வருடா வருடம் மாங்கனி திருவிழா நடைபெறும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads