ந. ரங்கசாமி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. ரங்கசாமி (N. Rangasamy) நடேசன் ரங்கசாமி பிறப்பு: ஆகத்து 4, 1950)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[2][3] இவர் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார்.
Remove ads
இளமைக் காலம்
இவர் ஆகத்து 4, 1950 ஆம் ஆண்டு நடேசன் கிருஷ்ணசாமி கவுண்டர் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் மற்றும் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார்.[4]
அரசியல் வாழ்க்கை
இவர் 2001 முதல் 2008 வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார் மற்றும் மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும், தொகுதிகளுக்கும் வந்தவர்.[5] இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
Remove ads
வகித்தப் பதவிகள்

- 1991 - தட்டாஞ்சாவடி - விவசாயத்துறை அமைச்சர்
- 1996 - தட்டாஞ்சாவடி - சட்டமன்ற உறுப்பினர்
- 2000 - தட்டாஞ்சாவடி - கல்வித்துறை அமைச்சர்
- 2001 - தட்டாஞ்சாவடி - முதலமைச்சர்
- 2006 - தட்டாஞ்சாவடி - முதலமைச்சர்
- 2011 - கதிர்காமம் - முதலமைச்சர்
- 2016 - கதிர்காமம் - எதிர்கட்சி தலைவர்
- 2021 - தட்டாஞ்சாவடி - முதலமைச்சர்
தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads