கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்திகை அல்லது கிருத்திகை என்பது ஒரு விண்மீன் கூட்டத்திற்கு பெயர். இது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் ராசி சக்கரத்தில் (ஓரை வட்டத்தில்) (Zodiac) குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்களில் மூன்றாவது விண்மீன் ஆகும். இது இந்திய மரபுப்படி கால் பாகம் மேஷ ராசியிலும் (மேஷ ஓரையிலும்) (Aries) முக்கால் பாகம் ரிஷப ராசியிலும் (ரிஷ ஓரையிலும்) (Taurus) உள்ள பரவலாக அறியப்பெற்ற ஒரு நாள்மீன் கூட்டம். எளிதில் யாரும் வெறுங்கண்ணால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனுடைய அறிவியற்பெயர் எம்45 ஆகும். சாதாரண வழக்கில் பேசப்படும் பெயர் பிலேயடாசு ஆகும்.
Remove ads
அறிவியல் விபரங்கள்
அறிவியல்படியும் Pleiades வானத்தில் நட்சத்திரக் கூட்டம். இது ‘திறந்த கூட்டம்’ (Open cluster) என்ற பகுப்பைச் சேர்ந்தது. திறந்த கூட்டங்கள் பிரபஞ்ச அளவைகளில் ‘சமீப காலத்தியது’. கார்த்திகைக் கூட்டம் உண்டாகி 100 மில்லியன் ஆண்டுகள் தான் இருக்கும். நம்மிடமிருந்து 444 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளன. சாதாரண தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் கூட கூட்டத்தில் பற்பல நட்சத்திரங்களைக் காணமுடியும்.
இரவில் மணியறிதல்
இரவில் விண்மீன்களைக் (நட்சத்திரங்களைக்) கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் கார்த்திகை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
கார்த்திகை யறுமீன் ஏற்றரியேகம்.
அதாவது, கார்த்திகை ஆறு விண்மீன்களைக் கொண்டது. அது உச்சத்தில் வரும்போது சிங்கராசி (கீழ்வானத்தில்) தோன்றி ஒரு நாழிகையாகி யிருக்கும்.
எ.கா. புரட்டாசி 10ம் நாள் இரவு கார்த்திகையை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். சூரியன் அன்று கன்னி ராசியில் நுழைந்து 10 நாட்கள் ஆகியிருக்கும். சிங்கராசியும் கன்னிராசியும் அடுத்தடுத்து இருப்பதால் கீழ்த்தொடு வானத்திலிருந்து இடச்சுழியாக சூரியனின் தூரத்தை இப்படிக் கணக்கிடலாம்: (1 நாழிகை = 24 நிமிடங்கள்). சிங்கராசி: 4 நாழிகை. கன்னி ராசி: 2/3 x 5 = 3 1/3 நாழிகை. ஆக, சூரியன் உதிப்பதற்கு இன்னும் 7 1/3 நாழிகைகள் உள்ளன. மணி, ஏறக்குறைய, 3-04 A.M. இதே முறையில் இதர நாட்களிலும் கணக்கிட்டு மாதிரிக்காக கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Remove ads
இந்துத் தொன்ம மரபுப்படி
சிவபெருமானுடைய வீரியத்தை அற்புதமான விதத்தில் அக்கினி தேவனுடைய தலையீட்டினால் ஏழு மகரிசிகளில் ஆறு ரிசிகளுடைய மனைவிகள் பெற்றுக்கொள்ளும்படி நேர்ந்தது. அவர்களுக்குப்பிறந்த ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து சண்முகன் என்ற ஒரு குழந்தை ஆயிற்று. இந்த ஆறு மனைவிகளுடைய கணவர்கள் அவர்களுக்குக் கொடுத்த சாபப்படி அவர்கள் ஆறு நட்சத்திரங்களாகி விட்டார்கள். அந்த நட்சத்திரக் கூட்டம் தான் கார்த்திகை. வெறுங்கண்ணாலேயே நாம் 6 நட்சத்திரங்களைப்பார்க்கலாம்.
மேற்கத்திய மரபுப்படி
இந்த விண்மீன்கூட்டத்தைக் கிரேக்கக் கதைகளிலுள்ள ‘ஏழு சகோதரிகள்’ என்று சொல்வதுண்டு. அவர்களுடைய பெயர்கள்: Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno and Asterope; அவர்களுடைய பெற்றோர்கள் Pleione and Atlas ம் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவர்கள். பழங்காலத்தில் ஏழு நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிந்ததாம். நமது முன்னோர்கள் காலத்தில் வானம் மிகச் சுத்தமாக இருந்தது தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு. ஆதி அமெரிக்கக் குடிகள் கண் பார்வையினுடைய வலிமையைச் சோதிப்பதற்கு Pleides ஐப்பார்த்து அதில் 12 நட்சத்திரங்களைக் காணமுடியுமா என்று சோதிப்பார்களாம்.
Remove ads
மேற்கோள்கள்
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads