ஒளியாண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு.
வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல;
ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்
Remove ads
வரைவிலக்கணம்
ஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:
ஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (photon), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.
ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 1015 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.
ஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.
Remove ads
சில துணுக்குத் தகவல்கள்
- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது.[1]
- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.
- பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
- பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.
- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.
Remove ads
ஒளியாண்டுகளில் தூரங்கள்
Remove ads
தொடர்புடைய அலகுகள்
ஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது 299792458 மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் 1⁄31557600 பகுதியாகும்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads