கார்த்திக் சிவகுமார்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் (25 மே 1977) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன் (2007), ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் காவியமான பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் "வந்தியத்தேவன்" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி ஆகியோர்க்கு சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.
இவரது திருமணம் சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், 3 சூலை 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.[3] இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் உண்டு.
Remove ads
திரைப்பட வாழ்க்கை
இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 2005 ஆம் ஆண்டு வெளியிடப்படுமென அறிவித்து நிதி பிரச்சனை காரணமாக சனவரி 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 3 வருட படப்பிடிப்புக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியானது.
Remove ads
நடித்த திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads