சிவகுமார்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகுமார் (Sivakumar) என்பவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவருக்கு, பெற்றோர் இட்ட பெயர், 'பாலதண்டாயுதபாணி' என்பதாகும். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள சூலூர் நகரிலிருந்து மூன்று கி.மீ. தூரத்திலுள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர் இவர் கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் 100 ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் இவர் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல நடிகருக்கான இலக்கணத்தை வகுத்தவர் என்றும் கூறப்படுகிறது.[3]
திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
- சிவகுமார் தனது ஆரம்ப காலத்தில் திரைப்படம் சார்ந்த நல்ல ஓவியராக வாழ்க்கையை தொடங்கினாலும் தமிழ் திரையுலகம் அவரை நல்லதொரு குணசித்திர நடிகராக தன் பக்கம் ஈர்த்து தக்க வைத்துக் கொண்டது.
- மேலும் தமிழ் திரையுலகில் சிவகுமார் நடிப்பையும் தாண்டி மேடை பேச்சு, சொற்பொழிவு, ஓவியம் வரைதல் போன்ற பல்துறை வித்தகராவார்.
- மேலும் தமிழ் திரையுலகில் நான்கு தலைமுறை நடிகர்களையும் கண்டு அவர்களுடன் இணைந்து நடித்த பழம்பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
- மேலும் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் ஏற்று மிக சிறப்பாக நடித்த பெருமை இவருக்கு உண்டு.
- மேலும் 1965 ஆம் ஆண்டு அன்றைய புகழ்பெற்ற படத்தயாரிப்பு நிறுவனமான ஏ. வி. எம். ஸ்டூடியோ தயாரித்து இயக்கிய காக்கும் கரங்கள் படத்தில் அன்றைய முன்னணி நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படத்தில் சிவகுமார் முதல் முதலாக அறிமுகமானார்.
- இவர் திரையுலகில் முழுநேர நடிகராக ஈடுபட்டதால் ஏ. வி. எம். சரவணன் அவர்கள் இவரது இயற்பெயரான பழநிசாமி என்ற பழமையான பெயரை மாற்றிவிட்டு சிவகுமார் என்று பெயர் மாற்றினார்.
- அதற்கு சிவகுமார் அவர்கள் எனது பெயர் பழநிசாமி என்பது எங்கள் தந்தையார் பழநி முருகன் வேண்டுதலையேற்று வைத்த பெயர் ஆதலால் மாற்று பெயர் கூட முருகபெருமானை சார்ந்த பெயராக இருக்க வேண்டும் என்று ஒரு அன்பு நிபந்தனை விதித்தார்.
- அதை அப்படியே ஏற்று கொண்ட ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் தனது தந்தை மெய்யப்ப செட்டியார் மூலம் " சிவகுமார் " என்று முருகபெருமானை குறிக்கும் பெயரை வைத்தார்.
- அவர் பெயர் மாற்றம் செய்ததற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் சிவகுமார் அவர்கள் தனது மூத்த மகனுக்கு அவரது பெயரான " சரவணன் " என்று (நடிகர் சூர்யாவின் இயற்பெயர்) தனது மகனுக்கு பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும் காக்கும் கரங்கள் திரைப்படம் 19 ஜூன் 1965 அன்று வெளியிடப்பட்டது.
- மேலும் அப்படத்தின் மூலம் இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் சிவகுமார் நட்பு உருவானது.
- இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கு திறமையான நடிகருக்கான கதவுகள் திறந்தது.
- இவர் அனைத்து வகைகளிலும் எந்த பாத்திரத்தையும் ஏற்று நேர்த்தியுடன் தனது அசாத்தியமான நடிப்பை வெளிபடுத்தி நடிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார்.
- மேலும் தனது நடிப்பின் ஆரம்ப காலத்தில் சிவகுமார் அவர்கள் தமிழ் திரையுலகில் நடிப்பில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனாக திகழ்ந்த போது அவரை போலவே சிவகுமார் தனது நடிப்பின் சாயலும், தாக்கமும், பாவனையிலும், பாணியும் சிவகுமார் வெளிபடுத்தி நடித்த போது சிவாஜி கணேசன் அவர்கள் உனகென்று ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கிக் கொள் என்று அன்பான அறிவுரையை வழங்கினார்.
- அதன் பிறகு சிவகுமார் தனது நடிப்பின் திறன்களை மிக எளிதாக மாற்றி கொண்டு புதிதான தனக்கென்று ஒரு பாணியில் நடித்தார்.
- மேலும் இவர் நடிப்பிற்கான அற்ப்பணிப்பில் உருவான குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களான சரஸ்வதி சபதம் (1966), கந்தன் கருணை (1967), திருமால் பெருமை (1968) மற்றும் உயர்ந்த மனிதன் (1968) போன்றவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டதாகும். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் வெற்றி பெற்ற ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) மற்றும் மிகவும் பிரபலமான கே பாலசந்தரின் சிந்து பைரவி (1985) திரைப்படங்களில் நடித்துள்ளார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), வண்டிச்சக்கரம் (1980) ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை (தெற்கு) வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது -(2007)ஆம் ஆண்டில் பெற்றார். இவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அவன் அவள் அது (1980) மற்றும் அக்னி சாட்சி (1982) ஆகிய திரைப்படங்களுக்குப் பெற்றார்.
- இவர் மூன்று தலைமுறைகளில், எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரசினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித் குமார், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
- அதன் பிறகு 2000 ஆம் காலகட்டத்தில் ராதிகாவுடன் இணைந்து சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் சிவகுமார் தனது மற்றொரு பரிமாண நடிப்பை வழங்கினார்.
- இவர் 2012 ஆம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜெயா தொலைக்காட்சி வாழ்நாள் சாதனையாளர் விருதை சிவகுமாருக்கு வழங்கி கௌரவித்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகிற்கு இவர் செய்த பாராட்டத்தக்க பங்களிப்புக்காக இவரை கௌரவிப்பதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டது.
- மேலும் இவர் சமீபத்திய காலங்களில் இந்து இறையியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தனது கருத்தைத் தெரிவித்த இவர் பொதுப் பேச்சில் இறங்கினார். இவருடைய சரளமான பேச்சுகளுக்காக பாராட்டப்பட்டார்.[4][5]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
- சிவகுமார் கோயம்புத்தூரில் உள்ள காசிகவுண்டன்புதூரில் ராக்கையா கவுண்டர்–பழநியம்மாள் இணையாருக்கு நான்காவது மகனாக பிறந்தார்.
- இவருக்கு முன்பு மூன்று அக்காவும் சுப்ரமணியசாமி (சிறு வயதிலே இறந்துவிட்டார்) என்ற இளைய சகோதரரும் இருந்துள்ளனர்.
- மேலும் இவர் தனது தாயார் விருப்பத்தை ஏற்று அவரது உறவினர் பெண்ணான இலட்சுமி என்பவரை 1974 ஆம் ஆண்டு மணந்தார். இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
- அதில் முதலாவதாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் என இரண்டு மகன்களும் படித்து பட்டம் பெற்று இருந்தாலும் தனது தந்தை போல் திரைப்படங்களில் நடிப்பதை ஆர்வம் கொண்டு தற்போது வரை நடித்து வருகின்றார். அதன் பிறகு பிருந்தா என்ற மகளும் உள்ளார். தங்கை பிருந்தா அவர்கள் திரையில் தோன்றி நடிக்காவிட்டாலும் திரைப்படங்களில் பின்னணி பாடகிய திகழ்ந்து வருகிறார்.[6].
- மேலும் சிவகுமார் அவர்கள் ஆன்மீக ஈடுபாடும், வைதீக நம்பிக்கையும் உடையவர் என்பதால் தனது விருப்ப கடவுளான முருகப்பெருமான் மீதான தீவிர பக்தராவார்.
- சிவகுமாரின் மூத்த மருமகள் பிரபல நடிகை ஜோதிகா ஆவார்.[7]
Remove ads
கம்பராமாயண சொற்பொழிவு
- கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.[8]
திரைப்படப் பட்டியல்
1960களில்
1970களில்
1980களில்
1990களில்
2000த்தில்
பின்னணிக் குரல்
2010களில்
Remove ads
தொலைக்காட்சித் தொடர்கள்
- கையளவு மனசு (1990)
- ரேவதி
- புஸ்பாஞ்சலி
- வீட்டுக்கு வீடு வாசப்படி
- பந்தம் (1994)
- ௭த்தனை மனிதர்கள் (1997)
- ஆட்சி இன்டர்நேஷனல் (1997-1998)
- திக் திக் திக் (1999)
- சித்தி (1999-2001)
- காவேரி (1999-2001)
- அண்ணாமலை (2002-2005)
- லட்சுமி (2006-2008)
விருதுகள்
சிவகுமார் மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் தெற்கில் பெற்றவர் மற்றும் இரண்டு முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர் .
பிலிம்பேர் விருதுகள் தெற்கு
- 1979 – சிறந்த நடிகர் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி- (தமிழில்)
- 1980 – சிறந்த நடிகர் – வண்டிச்சக்கரம் - (தமிழில்)
- 2007 - பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
- 1979 – சிறந்த நடிகர் விருது - அவன் அவள் அது
- 1982 - சிறந்த நடிகர் விருது - அக்னி சாட்சி
அண்ணா நூற்றாண்டு நூலகம்
- 2012 - வாழ்நாள் சாதனையாளர் விருது
நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள்
- 2015 - நார்வே தமிழ்த் திரைப்பட விழா--கலைச்சிகரம் விருது
விஜய் விருதுகள்
- 2018 - தமிழ் சினிமாவுக்கு பங்களித்ததற்காக விஜய் விருது
Remove ads
நூல்கள்
- இது ராஜபாட்டை அல்ல
- கம்பன் என் காதலன்
- டைரி(1945-1975)
- தமிழ் சினிமாவில் தமிழ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads