கால்சியம் அயோடைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கால்சியம் அயோடைடு (Calcium iodide) என்பது CaI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் மற்றும் அயோடின் சேர்ந்து அயனிச் சேர்மமாக இது உருவாகிறது. நிறமற்ற திண்மமாக உள்ள இச்சேர்மம் நீர்த்துப் போகும் தன்மையுடன் நீரில் நன்றாகக் கரையக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. கால்சியம் அயோடைடு சேர்மத்தின் பண்புகள் அதனுடன் தொடர்புடைய ஆலைடு சேர்மமான கால்சியம் குளோரைடுடன் ஒத்திருக்கிறது. புகைப்பட வேதியியலில்[1] கால்சியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், பூனைகளுக்கு அயோடின் சத்து வழங்கக் கூடிய அயோடின் மூலமாகவும் இது உணவில் பயன்படுகிறது.
Remove ads
வினைகள்
1898 ஆம் ஆண்டில் என்றி மோயிசான், கால்சியம் அயோடைடை தூய சோடியம் உலோகத்துடன் சேர்த்து ஒடுக்குதல் வினையின் மூலமாக தூய நிலை கால்சியத்தைத் தயாரித்தார்:[2]
கால்சியம் கார்பனேட்டுடன் கால்சியம் ஆக்சைடு அல்லது கால்சியம் ஐதராக்சைடு சேர்த்து ஐதரயோடிக் அமிலத்துடன் சூடுபடுத்துவதன் மூலமாக கால்சியம் அயோடைடைத் தயாரிக்கலாம்:[3]
காற்றில் மெல்ல ஆக்சிசன் மற்றும் கர்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து அயோடினை வெளியேற்றுகிறது. மாசடைந்த அயோடின் மாதிரிகளின் ஐயந்தரும் மஞ்சள் நிறத்திற்கு இதுவே காரணமாகும் [4]
- 2 CaI2 + 2 CO2 + O2 → 2 CaCO3 + 2 I2
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads