மக்னீசியம் அயோடைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்னீசியம் அயோடைடு (Magnesium iodide) என்பது MgI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் பல்வேறு நீரேற்றுகள் MgI2(H2O)x என்ற பொதுவாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. இவ்வகை அயனி ஆலைடு உப்புகள் யாவும் நீரில் நன்றாகக் கரையக்கூடியனவாக உள்ளன.
Remove ads
பயன்கள்
சில வனிக உபயோகங்களுக்கு மக்னீசியம் அயோடைடு பயன்பட்டாலும் பிரதானமாக இதை கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்த இயலும்.
தயாரிப்பு
மக்னீசியம் ஆக்சைடு, மக்னீசியம் ஐதராக்சைடு மற்றும் மக்னீசியம் கார்பனேட்டு ஆகியவற்றை ஐதரோ அயோடிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து மக்னீசியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.[4]
வினைகள்
ஐதரசன் சூழலில் உயர் வெப்ப நிலையில் மக்னீசியம் அயோடைடு நிலைப்புத் தன்மையுடன் உள்ளது, ஆனால் சாதாரண வெப்பநிலையில் காற்றில் சிதைவடைந்து தனிமநிலை அயோடினை வெளியேற்றி பழுப்பு நிறமாக மாறுகிறது. காற்றில் சூடாக்கும் போது மக்னீசியம் அயோடைடு முழுவதுமாகச் சிதைவடைந்து மக்னீசியம் ஆக்சைடாக[5] மாறுகிறது.
தூளாக்கப்பட்ட தனிமநிலை அயோடினுடன் மக்னீசியம் உலோகத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதாலும் மக்னீசியம் அயோடைடை தயாரிக்க முடியும். நீரற்ற மக்னீசியம் அயோடைடைத் தயாரிக்க வேண்டுமெனில் வினையானது உலர் சூழ்நிலையில் நடைபெற வேண்டும். மற்றும் உலர் இருயெத்தில் ஈதர் கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
பெய்லிசு இல்மான் வினையில் வைனைல் சேர்மங்களைத் தயாரிக்க மக்னீசியம் அயோடைடு பயன்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads