காளிம்பொங்
மேற்கு வங்கத்தின் நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காளிம்பொங் (Kalimpong) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காளிம்பொங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். [3] இது கடல் மட்டத்திலிருந்து 1250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[4] வடகிழக்கு இந்தியவின் தன்னாட்சி பெற்ற பகுதிகளில் ஒன்றான கோர்க்காலாந்து தன்னாட்சிப் பகுதியில்[5] காளிம்பொங் மாவட்டம் உள்ளது. இதன் அருகே சிலிகுரி நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் கோடைக்கால உயர்வெப்பம் 27°C மற்றும் குளிர்கால வெப்பம் 6°C ஆகும். இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் சிலிகுரியில் உள்ளது. இந்நகரத்திற்கு அருகே வடக்கில் சிக்கிம் மற்றும் வடகிழக்கில் பூட்டான் எல்லைகளாக உள்ளது.

மலைவாழிடமான காளிம்பொங் நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஆட்சிக் காலத்தில் பல கல்வி நிறுவனங்களை நிறுவினர்.[6] இதனருகில் அமைந்த பெரிய நகரம் டார்ஜீலிங் ஆகும். இந்நகரத்தில் நேபாள மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.


Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 23 வார்டுகள் கொண்ட காளிம்பொங் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 49,403 ஆகும். அதில் 25,100 ஆண்கள் மற்றும் 24,303 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 968 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.2% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 32,454, முஸ்லீம்கள் 2,111, கிறித்தவர்கள் 6,224, பௌத்தர்கள் 8,106 மற்றும் பிறர் 508 ஆகவுள்ளனர். இந்நகர மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,741 மற்றும் 10,230 ஆகவுள்ளனர்.[7] இந்நகரத்தில் நேபாள மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழ்கினறனர்.
Remove ads
போக்குவரத்து
சிலிகுரி - காங்டாக் நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை காளிம்பொங் நகரத்தின் வழியாகச் செல்கிறது.
கல்வி
இந்நகரத்தில் 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளது.
தட்ப வெப்பம்
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads