காவடி யாத்திரை

From Wikipedia, the free encyclopedia

காவடி யாத்திரை
Remove ads

காவடி யாத்திரை அல்லது கான்வர் யாத்திரை (Kānvar or Kavad Yātrā) (தேவநாகரி: कांवड़ यात्रा), வட இந்தியாவில் ஆண்டுதோறும் சாதுர்மாஸ் விரத காலத்தில், (சூலை 15 முதல் ஆகஸ்டு 15 முடிய முப்பது நாட்கள்), தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிவபக்தர்கள் சோமவார விரதம் மேற்கொண்ட பின்னர், காவடி ஏந்தி, தொலைதூரத்தில் உள்ள அரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமித்து, அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிசேகம் செய்வார்கள்.

Thumb
கான்வர் யாத்திரையின் போது காவடி ஏந்திய பக்தர்களின் கூட்டம், ஹரனின் படித்துறை, அரித்துவார்
Thumb
காவடி ஏந்திய பக்தர்கள் கூட்டம், அரித்துவார், 2007

2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 12 மில்லியன் சிவபக்தர்கள் காவடி ஏந்தி அரித்துவார் வரை கன்வர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை எண் 58 வழியாக அரித்துவாருக்கு கால்நடையாக செல்லும் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, சூலை – ஆகஸ்டு மாதங்களில் இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.[1]

Remove ads

நம்பிக்கைகள்

காவடி யாத்திரையின் போது பக்தர்கள் அத்தி மரத்தை பார்ப்பது கெட்ட சகுனமாக கருதுகின்றனர். [2]மேலும் காவேடி யாத்திரையின் போது பக்தர்கள் ரிஷிகேஷ் பகுதிக்கு யாத்திரை செல்வதில்லை.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads