காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம்

தமிழ்நாட்டில் உள்ள காட்டுயிர் காப்பகம் From Wikipedia, the free encyclopedia

காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம்map
Remove ads

காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் (Cauvery North Wildlife Sanctuary) என்பதுஇந்தியாவின் தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும்.[1][2] இந்த சரணாலயம் தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் வடக்கே அமைந்திருப்பதாலும், ஆற்றின் தெற்கே கர்நாடக மாநிலத்தின் காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைவதாலும் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இச்சரணாலயம் 2014ஆம் ஆண்டில் மார்ச் 12 அன்று, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் பிரிவு 26-ஏ இன் உட்பிரிவு (1)இன் உட்பிரிவு (1)இன் உட்பிரிவு (பி)-ன் கீழ் தமிழ்நாடு அரசு, காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது.[3][4]

Thumb
காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம்

இச்சரணாலயம் மேலகிரி மலைத் தொடர்களின் கீழ் வருகிறது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இணைவிடத்தில் குறிப்பிடத்தக்க கானுயிரின வளாகங்கள். இது மாதேசுவரன் மலை, பிஆர் மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவற்றுடன் முக்கிய இணைப்பை உருவாக்குகிறது. இந்த சரணாலயம் வடமேற்கு தமிழ்நாட்டின் தருமபுரி வன கோட்டத்தின் பாலக்கோடு வட்டம் மற்றும் ஓசூர் வன கோட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads