கித்தா

From Wikipedia, the free encyclopedia

கித்தா
Remove ads

கித்தா என்பது (மலாய்: Getah; ஆங்கிலம்: Rubber); என்பது ஒரு மலாய்ச் சொல் ஆகும்.[1] தமிழில் ரப்பர் என்று பொருள்படும். தென்னிந்தியாவில் இருந்து இந்தியர்கள் மலாயாவிற்கு சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்து இந்தச் சொல் மலேசியாவில் ஒரு வழக்குச் சொல்லாக இருந்து வருகிறது. அப்போதைய காலத்தில் ரப்பர் எனும் ஆங்கிலச் சொல் ஒரு பயன்பாட்டுச் சொல்லாக இருக்கவில்லை.

Thumb
சீவப்பட்ட ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் சேகரிக்கப் படுகிறது

பொதுவாக, மலேசியாவில் உள்ள தமிழர்கள், அனைவரும் ரப்பர் என்பதை கித்தா என்றுதான் அழைக்கிறார்கள். ரப்பர் தோட்டத்தை கித்தா தோட்டம் என்றும்; ரப்பர் மரங்கள் உள்ள இடத்தை கித்தா தோப்பு என்றும் அழைக்கிறார்கள். கித்தா என்பது மலேசியத் தமிழர்கள் உருவாக்கிய வட்டாரச் சொற்களில் ஒன்றாகும்.

ரப்பர் பாலைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் ஏனத்தை கித்தா மங்கு என்று அழைக்கிறார்கள். மங்கு என்பது மங்கோக் எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. மங்கோக் என்றால் குவளை.

Remove ads

பின்னணி

கடல் கடந்து வந்த மக்கள் ஒரு புதிய சூழலில், தங்களுக்கு முன்பின் அறியாத தெரியாத ஒரு தொழிலை மேற்கொண்ட பொழுது, அந்தத் தொழிலை ஒட்டிய பல்வேறு பொருள்களுக்கு பெயர் வைப்பதற்காக, அவர்கள் புதிய சொற்களைத் தேடி அலையவில்லை. மாறாக, அப்போது புழக்கத்தில் இருந்த மலாய்ச் சொற்களை, அப்படியே பயன்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் கித்தா என்பதும் ஒரு சொல் ஆகும்.

இதைத் தவிர, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சில தமிழ்ச் சொற்களையும் உருவாக்கியுள்ளனர். அந்தச் சொற்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. மலேசியத் தமிழர்கள் உருவாக்கிய சில தமிழ்ச் சொற்கள்:

  • ஒட்டுப் பால்
  • கோட்டுப் பால்
  • கட்டிப்பால்
  • குத்து உளி
  • காது உளி
  • ஏணிக் கோடு
  • கழுத்துக் கோடு
  • நெற்றிக் கோடு
  • நிரை
  • வேலைக்காடு
  • பாசாக்காடு
  • ஒட்டுக்கன்று
  • தவரணை
  • அந்தி வேலை
  • பசியாறல்
  • தொங்கல்
  • தண்டல்
  • பச்சைக்காடு
  • கொலை வெட்டு
  • கம்பிச் சடக்கு


Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads