கிம்மிகெலா சுலி

நேபாளம் சிக்கிம் இடையில் உள்ள சிகரம் From Wikipedia, the free encyclopedia

கிம்மிகெலா சுலிmap
Remove ads

கிம்மிகெலா சுலி (Gimmigela Chuli) என்பது இமயமலையில் உள்ள இரண்டு மலைச்சிகரங்களாகும். இரட்டை சிகரங்கள் அல்லது தி டுவின்சு என்ற பெயராலும் இவை அறியப்படுகின்றன. நேபாளத்தின் மேச்சி மண்டலத்திலுள்ள தாப்லேசங்கு மாவட்டத்திற்கும் மற்றும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும் இடையேயான எல்லையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கிம்மிகெலா சுலிGimmigela Chuli, உயர்ந்த புள்ளி ...
Thumb
இடமிருந்து தாபிள் சிகார் (6510 மீ), இரட்டை சிகரங்கள் மற்றும் கஞ்சஞ்சங்கா (8586 மீ).
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து 7,350 மீ (24,110 அடி) உயரத்தில் கிம்மிகெலா சுலி சிகரம் உள்ளது. இதன் மேற்புடைப்பு 432 மீ (1,417 அடி) உயரம் உள்ளது. கஞ்சஞ்சங்கா மலையிலிருந்து வடகிழக்கில் சுமார் 4.2 கிமீ (2.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

கிம்மிகெலா சுலி மலையில் 7,005 மீ (22,982 அடி) மீட்டர் உயரமுள்ள கிம்மிகெலா சுலி II என்ற துணை சிகரமும் உள்ளது.[2] இதன் மேற்புடைப்பு 185 மீ (607 அடி) உயரம் உள்ளது. சில நேரங்களில் "கிம்மிகெலாவின் சகோதரி" என்று அழைக்கப்படும் இந்த துணை சிகரம், முற்றிலும் இந்தியாவிற்குள் அமைந்துள்ளது. கிம்மிகெலா I மற்றும் கிம்மிகெலா II ஆகிய இரண்டு சிகரங்களும் சேர்ந்து "இரட்டை சிகரங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

Remove ads

மலையேற்ற வரலாறு

1993ஆம் ஆண்டு சிக்கிமில் இருந்து கிழக்கு முகடு வழியாக மேற்கு (பிரதான) சிகரத்தை அடைய சப்பானிய மலையேற்றக் குழு பயணம் மேற்கொண்டது. இக்குழுவின் பயணத் தலைவர் மசனோரி சாடோவின் மரணத்தை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியன்று இம்முயற்சி முடிவடைந்தது. கிம்மிகெலா II இன் முதல் ஏற்றத்தை இந்தக் குழு அடைந்து, இரண்டு சிகரங்களையும் இணைக்கும் கிம்மிகெலா I சிகரத்திற்கு செல்லும் முயற்சியில் இருந்தபோது, ​​சாடோ 35 மீட்டர் (115 அடி) உயரத்தில் ஒரு மறைந்திருந்த பள்ளத்தில் விழுந்தார். மற்ற குழு உறுப்பினர்கள் முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவரது உடல் மீட்கப்படவில்லை. இதனால் பயணம் நிறுத்தப்பட்டது.[3]

ஓர் ஆண்டு கழிந்த பின்னர் 1994ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முன்னதாக 1993ஆம் ஆண்டில் தோல்வியுற்ற பயணக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் மீண்டும் முயற்சித்து கிம்மிகெலா I சிகரத்தை அடைந்தனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads