கிரண் ராவ்

From Wikipedia, the free encyclopedia

கிரண் ராவ்
Remove ads

கிரண் ராவ் (Kiran Rao) 1973 நவம்பர் 7 அன்று பிறந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் பாலிவுட் நடிகரான ஆமிர் கானின் மனைவி, நடிகை அதிதி ராவ் ஆகியோரின் உறவினர் ஆவார்.

விரைவான உண்மைகள் கிரண் ராவ், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

1973 நவம்பர் 7 அன்று தெலங்காணாவில் கிரண் ராவ் பிறந்துள்ளார்.[சான்று தேவை] இவரது தாத்தா ஜனும்பல்லி ஜே. ராமேஸ்வர் ராவ் தெலங்காணா மாவட்டம் வனபர்த்தி மாவட்டத்தைச் சார்ந்தவர். அவர் ஒரு இந்திய வழக்கறிஞர், தூதர், நாடாளுமன்ற உறுப்பினரும் புத்தக வெளியீட்டாளரும் ஆவார். மஹபூப் நகர் தொகுதியில் இருமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1992 ல், அவரது பெற்றோர் மும்பைக்கு குடிபெயர்ந்ததால் இவரும் கொல்கத்தாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்[2] கிரண் ராவ் முதுகலை உணவு அறிவியல் பட்டம் பெற்றார். இரண்டு மாதங்களுக்கு சோபியா பாலிடெக்னிக்கில் சமூக கம்யூனிகேஷன்ஸ் மீடியா பாடநெறிக்கையில் கலந்து கொண்டார், ஆனால் பின்னர் அங்கிருந்து வெளியேறி தில்லி சென்றார். பின்னர், புது தில்லி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியில் முதுகலைப் பாடம் பெற்றார்[3] நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் முதல் உறவினர் ஆவார்.

Remove ads

தொழில்

அஷுதோஷ் கோவர்கர் இயக்கிய "'லகான்" படத்தில் ஒரு இயக்குநராக ராவ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் "ஸ்வதேஷ்: வீ த பீப்பிள்" படத்திற்கு உதவினார். லகான் வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் 74 வது அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆமிர் கான் தயாரித்த அந்தப் படத்தில் இவரும் நடித்திருந்தார். "லகான்" படத்திற்கு முன்னர், "தில் சாத்தா ஹை" படத்தில் நடிகைக்கு ஒரு நிமிடமே வந்து போகும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] இவர் "மான்சூன் வெட்டிங்" படத்திற்காக அகாதமி விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட மீரா நாயருக்கு இரண்டாவது உதவியாளராக பணிபுரிந்தார்.[5]

அமிர் கான் புரொடக்சன்ஸின் கீழ் ஜனவரி 2011 இல் வெளியிடப்பட்ட "டோபி காட்" என்ற படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார்.[6][7] கொல்கத்தாவில் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார்[2]

2015 ஆம் ஆண்டில் மும்பை திரைப்பட விழாவின் தலைவராக கிரண் ராவ் நியமிக்கப்பட்டார்.[8] இவர் மராத்தி மொழியில் இசைக்கப்பட்ட "டூபான் ஆலா" சத்யமேவ ஜெயதே தண்ணீர் கோப்பை கீதம் என்ற பாடலை பாடியுள்ளர்.[9]

Remove ads

சொந்த வாழ்க்கை

Thumb
2017 ல் ஆமிர் கான் & கிரண் ராவ் இருவரும் பானி அறக்கட்டளையின் மராத்தி நிகழ்ச்சியான "சாலா ஹவா யு தியா"வின் தொகுப்பை மேம்படுத்துகிறனர்

ராவ் நடிகர் ஆமிர் கானை2005 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்னர் , 2002இல் ஆமிர் கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை விவாகரத்து செய்தார். லகான் படப்பிடிப்பின்போது அவர்கள் சந்தித்தனர். படத்தின் துணை இயக்குநர்களில் ஒருவராக ராவ் இருந்தார். மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் இப்போது அவர்கள் வாழ்கின்றனர்.[10] இந்த தம்பதியருக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் டிசம்பர் 5, 2011 அன்று பிறந்தார், அப்துல் கலாம் ஆசாத்தின் பெயரை அவருக்குச் சூட்டியுள்ளனர்.[11] அவர் ஒரு நாத்திகர் ஆவார்.[12]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads