கிராது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராது (Kratu), பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய மானசபுத்திரர்களில் ஒருவர்.[1]மேலும் சப்தரிஷிகளிலும் ஒருவராக கருதப்படுகிறார். இவரது 60,000 குழந்தைகளை வாலகில்யர்கள் என்பர்.
தொன்ம வரலாறு

சுவாயம்பு மனுவின் மன்வந்தர காலத்தின் போது, பிரம்மாவின் மானசபுத்திரர்களில் ஒருவர். மேலும் பிரஜாபதியான கிராது ரிஷி, பிரஜாபதியான கதர்மா எனும் ரிஷியின் மகளான கிரியாவை மணந்தவர். இவருக்குப் பிறந்த 60,000 குழந்தைகளை வாலகில்யர்கள் என அழைப்பர். வாலகில்யர்களின் பெயர் ரிக் வேதத்தின் 8வது மண்டலத்தில் குறிப்பிட்டுள்ளது. கிராது ரிஷியின் உடன்பிறந்த சகோதரிகள் புண்ணியம் மற்றும் சத்தியவதி ஆவார். மேலும் கிராது ரிஷி சந்ததி எனும் பெண்ணை மணந்ததாக புராணங்கள் கூறுகிறது.

தன் மருமகனான சிவனை விட்டு விட்டு, தக்கன் யாகம் செய்த போது, அந்த வேள்வித் தீயில் பார்வதி தீக்குளித்து மடிந்தாள்.[2][3] இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தனது பூத கணங்களை அனுப்பி, தட்சனின் வேள்வியை அழித்து, அதில் கலந்து கொண்ட தேவர்கள் மற்றும் ரிஷிகளையும் அழிக்க ஆணையிட்டார். தட்சனின் வேள்வியில் கலந்து கொண்ட கிராது ரிஷியும் மடிந்தார் வைவஸ்வதமனுவின் காலத்தில் கிராது ரிஷி திருமணம் செய்து கொள்ளாமல், அகஸ்திய முனிவரின் மகனான இத்மாவாகானை தத்தெடுத்து வளர்த்தார்.
Remove ads
இதனையும் காண்க
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads