கிராஸ்னதார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராஸ்னதார் (உருசியம்: Краснодар) என்பது தெற்கு உருசியாவின் மிகப்பெரிய நகரமாகும். இது கிராஸ்னதார் பிரதேசம்இன் நிர்வாக மையம் ஆகும். இது குபன் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு தெற்கே சுமார் 1300 கி.மீ தொலைவில் உள்ளது. கருங்கடல் இங்கிருந்து மேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது.[2] இது தெற்கு ரஷ்யாவின் கலாச்சார மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1]
Remove ads
வரலாறு
இந்த நகரம் 1793 ஆம் ஆண்டில் கருங்கடல் கோசாக்குகளால் ரஷ்யாவின் தெற்கு எல்லையைக் காப்பதற்காக ஒரு கோட்டையாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு எக்கத்தரீனோடார் (உருசியம்: Екатеринодар) என்று பெயரிடப்பட்டது, பின்னர் 1920 இல் கிராஸ்னதார் என மறுபெயரிடப்பட்டது.[5]
பொருளாதாரம்
கிராஸ்னதார் தெற்கு ரஷ்யாவின் ஒரு முக்கிய பொருளாதார மையமாகும். இப்பகுதியின் விவசாய விளைபொருட்களை பதப்படுத்துதல், இயந்திரங்கள் தயாரித்தல், பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் ஜவுளித் தொழில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.[6]
புகைப்பட தொகுப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
