கிரிஷ் காசரவள்ளி

From Wikipedia, the free encyclopedia

கிரிஷ் காசரவள்ளி
Remove ads

கிரிஷ் காசரவள்ளி (Girish Kasaravalli) (பிறப்பு: திசம்பர் 3, 1950) இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனராவார். கன்னட சினிமாவில், மற்றும் இணை சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார்.[1] தனது படைப்புகளுக்காக சர்வதேச அளவில் அறியப்பட்டஇவர் நான்கு சிறந்த தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பதினான்கு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்; கட்டாஷ்ரத்தா (1977), தபரன கதே (1986), தாயி சாஹேபா (1997) மற்றும் திவீபா (2002) போன்றவை.[2][3] 2011 இல், இந்திய அரசின் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]

விரைவான உண்மைகள் கிரிஷ் காசரவள்ளி, பிறப்பு ...

புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரது சான்றிதழ் படிப்பு, அவாஷேஷ் என்று இவர் தயாரித்த படத்திற்கு சிறந்த மாணவர் படம் மற்றும் அந்த ஆண்டிற்கான சிறந்த குறும்பட திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தது. மேலும், இவர் பதின்மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.[5]

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இவர், 1950 திசம்பர் 3 ஆம் தேதி சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி வட்டத்திலுள்ள கேசலூர் கிராமத்தில் பிறந்தார்.[6] ஒரு விவசாயியும், ஒரு சுதந்திர போராட்ட வீரருமான கணேசு ராவ் மற்றும் இல்லத்தரசியான இலட்சுமிதேவி ஆகியோருக்கு 10 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். (ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்). இவர் தனது ஆரம்பக் கல்வியை கேசலூரிலும், நடுநிலைப் பள்ளி கல்வியை கம்மரடியில் பயின்றார். புத்தக ஆர்வலர்களின் குடும்பத்தில் இருந்து வந்த இவர், சிறு வயதிலிருந்தே தனது தந்தையால் படிக்கத் தொடங்கப்பட்டார். இவரது தந்தை கர்நாடகாவைச் சேர்ந்த நாட்டுப்புற நடன அமைப்பான யக்சகானத்தின் புரவலர் ஆவார்.

பிரபலமான கன்னட திரைப்படங்களைத் திரையிட தனது கிராமத்திற்கு ஒரு முறை வந்த டூரிங் டாக்கீஸால் இவர் ஈர்க்கப்பட்டார். இது சினிமா உலகிற்கு இவர் வெளிப்படுத்திய முதல் நிகழ்வு. படைப்புக் கலைகள் மீதான இவரது அன்பை ஆதரித்த மற்றொரு உறவினரும், ரமோன் மக்சேசே விருது வென்றவரும், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவருமான இவரது தாய்மாமன் கே.வி.சுப்பண்ணா என்பவராவார். இவர் நீணாசம் என்ற பிரபலமான நாடக நிறுவனத்தை நிறுவினார்.

பின்னர், சிவமோகா சென்று சஹ்யாத்ரி கல்லூரியில் பட்டம் பெற்றார். கவிஞர்களான ஜி.எஸ்.சிவருத்ரப்பா மற்றும் சா. சி. மருலையா இவரது கன்னட ஆசிரியர்களாக இருந்ததால் கல்லூரி இவருக்கு ஒரு மாற்றமாக இருந்தது.[7] பின்னர் மணிப்பால் மருந்தியல் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி பல கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஒரு பொதுவான இடமாக இருந்தது. மேலும் இவரது படைப்பு ஆர்வங்களை உயிரோடு வைத்திருந்தது. பட்டம் முடித்த இவர் பயிற்சிக்காக ஐதராபாத்து சென்றார். ஆனால், திரைப்படத்திலும், கலையிலும் இருந்த ஆர்வம் காரணமாக தனது தொழிலை நிர்வகிப்பது கடினமாக உணர்ந்தார். மருந்தியல் துறையில் இருந்து விலகிய இவர் புனேவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர முடிவு செய்தார்.

Remove ads

தொழில்

Thumb
இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் காசரவள்ளி (வலது) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தாராவுடன் (இடப்புறம்) ( 2005 )

காசரவள்ளி 1975 இல் புனேவில் இருந்து திரைப்பட இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்றார். அகிரா குரோசாவா, சத்யஜித் ராய், ஓசு, பெடெரிக்கோ ஃபெலினி மற்றும் அன்டோனியோனி ஆகியோரின் உலகம் இவருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் நவ-யதார்த்தவாத சினிமா மீதான இவரது நம்பிக்கை ஆழமடைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேர்காணலில், இந்த திரைப்படத் தயாரிப்பாளர்களால், குறிப்பாக ஓசுவால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தார். தான் இறுதி ஆண்டு படிக்கும் பொழுதே, தான் ஓர் உதவி இயக்குநராக வேண்டும் என்றே முடிவு செய்தார். பி. வி. கராந்த் இயக்கிய திரைப்படமான சோமனா துதி என்ற படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். திரைப்படக் கல்லூரியிலிருந்து தங்கப் பதக்கத்துடன் வெளியேறினார். அவேசே என்ற இவரது படம் அந்த ஆண்டின் சிறந்த சோதனை குறும்படத்திற்கான வெள்ளித் தாமரை விருதை வென்றது.

ஒரு சுதந்திர இயக்குநராக இவரது முதல் படம் 1977 இல் கட்டாச்ரத்தா ; இது இவருக்கு சிறந்த திரைப்படத்திற்கான தங்கத் தாமரை விருதினையும், ஒரு சில சர்வதேச விருதுகளையும் வென்றது. இந்த படத்தைத் தொடர்ந்து மேலும் பல தலைசிறந்த படைப்புகள் இவரிடமிருந்து வெளிவந்தன. சிறிது காலம், பெங்களூரில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1981 ஆம் ஆண்டில் டி.எஸ். நாகபாரனாவின் கிரஹனா திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார், 1987 ஆம் ஆண்டில் தபரனா கதேவுக்காக தனது இரண்டாவது தங்கத் தாமரை விருதினை வென்றார். இந்தியாவின் சிறந்த திருத்தப்பட்ட படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது, ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகளைக் கையாள்கிறது. 1997 ஆம் ஆண்டில், இவர் மற்றொரு தலைசிறந்த படைப்பான தாய் சாஹேபாவைக் கொண்டு வந்தார். இது இவருக்கு மூன்றாவது தங்கத் தாமரை விருதினை பெற்றுத் தந்தது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து இந்திய சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கையாளும் இயக்குனரின் மிகவும் முதிர்ந்த படைப்பாக தாயி சாஹேபா கருதப்படுகிறது.

திரைப்படங்களில் இவர்து விவரிப்பு அமைப்பு தனித்துவமானது. மேலும் இது ஒரு சமூக சூழ்நிலையை சித்தரிக்கும் சக்திவாய்ந்த வழியைக் கொண்டிருந்தது. மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த திவீபாவுடன் தனது வெற்றியை மீண்டும் செய்தார். இது இவருக்கு நான்காவது தங்கத் தாமரை விருதை வென்றது. திவீபா இவரது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டது. இது இசையை விரிவாகப் பயன்படுத்தியது. மேலும், பார்வைக்கு பிரமிக்க வைக்கிறது. தங்கத் தாமரை விருதுகளை வென்ற இந்த நான்கு படங்களைத் தவிர, இவர் 1979 இல் 'அக்ரமணா', 1981 இல் 'மூரு தாரிகலு', 1988 இல் 'பன்னட வேஷா', 1990 ல் 'மானே', 1996 ல் 'கிரௌரியா', 2004 இல் 'ஹசீனா', 2006 இல் 'நாயீ நெராலு' ஆகியத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

எஸ்.எல்.பைரப்பாவின் அதே பெயரைக் கொண்ட புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, மறுபிறவி பற்றிய மிகவும் தீவிரமான மற்றும் வினோதமான கருத்தை 'நாயி நெராலு' கையாண்டது. காசரவள்ளி இந்த விஷயத்திற்கு வேறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளார். இது கராச்சி திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதை வென்றது. கராச்சி சர்வதேச விழாவிலும் சிறந்த கௌரவத்தை வென்ற முதல் கன்னடத் திரைப்படமானது.

2008 ஆம் ஆண்டில் வைதேகியின் அதே பெயரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு குலாபி டாக்கீஸை இயக்கியுள்ளார். இது பல சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டது, விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றது. 2010 ஆம் ஆண்டில், இவர் கனசெம்பா குதுரேயநேரி என்ற படத்தை இயக்கினார். இது இவருக்கு பல சர்வதேச விருதுகளைப் பெற்றுத் தந்தது. 2011 ஆம் ஆண்டின் சிறந்த கன்னடத் திரைப்படத்திற்கான தேசியப் திரைப்பட விருதை வென்ற தனது கூர்மாவதாரா என்ற படத்தை இயக்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய இமேஜஸ் / ரெப்லெக்சன்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரித்தார்.[8][9]

ரோட்டர்டாமின் சர்வதேச திரைப்பட விழா 2003 இல் இவரது படங்கள் திரையிடப்பட்டது. ஆகத்து 2017 இல், கோவாவின் என்டர்டெயின்மென்ட் சொசைட்டி இவரது நினைவாக கோவாவில் ஒரு திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தது.[10]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் 21 ஏப்ரல் 1978 இல் நடிகை வைசாலியை மணந்தார்.[7] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்: மகன் அபூர்வா மற்றும் மகள் அனன்யா காசரவள்ளி. வைசாலி உடல்நலக்குறைவால் 2010 இல், தனது 59 வயதில் இறந்தார்.[11]

இவர் ஒரு ஆர்வமுள்ள வாசகராவார். சிவராம காரந்த், குவெம்பு மற்றும் உ. இரா. அனந்தமூர்த்தி ஆகியோரின் படைப்புகளை தனது படைப்புகளில் கணக்கிடுகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads