கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ் (Chris Woakes, பிறப்பு: 2 மார்ச் 1989) என்பவர் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] இவர் ஒரு வலது-கை மட்டையாளரும் வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 5வது போட்டியாகும். இவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[2] லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் வோக்ஸ் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads