2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
Remove ads

2019 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2019 ICC Cricket World Cup) என்பது ஐசிசி நடத்திய 12-வது துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆகும். 2019 மே 30 முதல் சூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை இங்கிலாந்தும் வேல்சும் இணைந்து நடத்தின.[1][2][3] 2019 சூலை 14 அன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இலார்ட்சில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஆட்டமும் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையிலான நான்குகள் விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...

2015 தொடரை ஏற்று நடத்த இங்கிலாந்தும் வேல்சும் பின்வாங்கியதை அடுத்து, 2019 உலகக்கிண்ணச் சுற்றை ஏற்று நடத்தும் உரிமை 2006 ஏப்ரலில் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டது. முதலாவது ஆட்டம் இங்கிலாந்து, ஓவல் அரங்கிலும், இறுதி ஆட்டம் இலார்ட்சு அரங்கிலும் நடைபெற்றன. ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் நடைபெறுகின்றன. முன்னராக 1975, 1979, 1983, 1999 உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கு இடம்பெற்றன.

ஆரம்ப சுற்றில், 10 அணிகளைக் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வோர் அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதின. போட்டிகள் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. அயர்லாந்து, ஆப்கானித்தான் அணிகள் தேர்வு அணிகளாக 2017 சூன் மாதத்தில் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தேர்வு அணிகள் 10 இலிருந்து 12 ஆக அதிகரித்தன. ஆனால், இரண்டு தேர்வு அணிகள் 2019 உலகக்கோப்பையில் பங்குபெறவில்லை. அனைத்துத் தேர்வு அணிகளும் பங்குபற்றாத முதலாவது உலகக்கோப்பைப் போட்டியாக 2019 போட்டி அமைந்தது.[4] அத்துடன் தேர்வு அணியல்லாத நாடுகள் எதுவும் பங்குபற்றாத முதலாவது உலகக்கோப்பை போட்டியும் இதுவாகும்.

Remove ads

தகுதி

Thumb
2019 உலகக்கோப்பையில் போட்டியுடும் நாடுகள்.
  நடத்தும் நாடு என்ற வகயில் தெரிவு செய்யப்பட்டது
  ஐசிசி பஒநா வாகையாளர் தரவரிசையில் தகுதி
  2018 தகுதிகாண் போட்டிகளில் இருந்து
  தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியடையாத நாடுகள்

முந்தைய 2011, 2015 உலக்கிண்ணப் போட்டிகளில் 14 அணிகள் போட்டியிட்டன. தற்போதைய 2019 போட்டிகளில் 10 நாடுகள் மட்டுமே பங்குபற்றுகின்றன.[5] போட்டிகளை நடத்தும் நாடு என்ற வகையில் இங்கிலாந்தும், 2017 செப்டம்பர் 30 இல் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் ஏழு இடங்களைப் பெற்ற நாடுகளும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டன. எஞ்சிய இரண்டு இடங்களும், 2018 தகுதி-காண் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன.[6] தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்ததால் முதன் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் அணி நேரடியாகத் தகுதி பெறத் தவறியது.[7][8][9]

அயர்லாந்து, ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் புதிய தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளாக ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்டன. 2018 இல் நடத்தப்பட்ட தகுதி-காண் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் இசுக்காட்லாந்தை டக்வோர்த் லூயிஸ் முறை மூலம் வென்றது.[10] ஆப்கானித்தான் அயர்லாந்தை வென்றது. இதன்மூலம் அயர்லாந்தும், சிம்பாப்வேயும் தகுதி பெறத் தவறின.[11] 1983 ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக சிம்பாப்வே அணி உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெறத் தவறியது.[12] அயர்லாந்தும் 2007 இற்குப் பின்னர் முதல் தடவையாக உலகக்கிண்ணத்தின் விளையாடத் தகுதிபெறத் தவறியது. உலககோப்பை வரலாற்றில் முதல் தடவையாக தேர்வு அணிகள் மட்டும் பங்குபெறும் உலககோப்பைப் போட்டியாக 2019 போட்டி அமைந்தது.[13]

மேலதிகத் தகவல்கள் தகுதி பெறும் காரணம், நாள் ...
Remove ads

நிகழிடங்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்சில் உலகக்கிண்ண நிகழிடங்கள்

கொல்கத்தாவில் நடந்த பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) கூட்டத்தொடரின் முடிவில் 2018 ஏப்ரல் 26 அன்று போட்டிகள் நடத்தப்படும் அரங்குகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன. ஆரம்பக் கட்டப் போட்டிகளுக்காக இலண்டன், ஒலிம்பிக் விளையாட்டரங்கமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.[16][17] ஆனாலும், இவ்வரங்கு பின்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.[18]

மேலதிகத் தகவல்கள் நகரம், பர்மிங்காம் ...
Remove ads

அணிகள்

பங்குபெற்றும் அனைத்து அனைத்து அணிகளும் தமது அணிகளின் உறுப்பினர்களின் பட்டியலை 2019 ஏப்ரல் 23 இற்கு முன்னர் அறிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.[19] உலகப்போட்டி தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் இறுதிப் பட்டியல் தரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.[20] நியூசிலாந்து முதலில் தனது பட்டியலை அனுப்பியது.[21] தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் வயதில் (அகவை 40) கூடிய வீரர் ஆவார். வயதில் குறைந்தவர் ஆப்கானித்தானின் முஜீப் உர் ரகுமான் (18) ஆவார்.[22][23]

ஆட்ட அதிகாரிகள்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2019 ஏப்ரலில் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான நடுவர்கள், மற்றும் முறையீடு நடுவர்களின் பட்டியலை அறிவித்தது.[24] நடுவர் இயன் கூல்ட் இப்போட்டிகளின் முடிவில் தான் இளைப்பாறப்போவதாக அறிவித்தார்.[25]

நடுவர்கள்

ஆத்திரேலியா
இந்தியா
இங்கிலாந்து
நியூசிலாந்து
  • நியூசிலாந்து கிறிசு காஃபனி
பாக்கித்தான்
தென்னாப்பிரிக்கா
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்

முறையீட்டு நடுவர்கள்

Remove ads

பரிசுப் பணம்

2015 உலகக்கிண்ணத்தைப் போன்று, இம்முறையும் $10 மில்லியன் பரிசுப் பணத்தை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒதுக்கியது.[26] பரிசுப் பணம் அணிகளின் ஆட்ட செயல்திறனுக்கேற்ப பின்வருமாறு பங்கிடப்படுகிறது:[27]

மேலதிகத் தகவல்கள் கட்டம், பரிசுப் பணம் (அமெ$) ...
Remove ads

பயிற்சி ஆட்டங்கள்

அதிகாரபூர்வமற்ற பத்து ஒருநாள் பயிற்சி ஆட்டங்கள் மே 24 முதல் மே 28 வரை நடைபெற்றன.[28]

பயிற்சி ஆட்டங்கள்
24 மே 2019
10:30
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
262 (47.5 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
263/7 (49.4 நிறைவுகள்)
பாபர் அசாம் 112 (108)
முகம்மது நபி 3/46 (10 நிறைவுகள்)
அசுமத்துல்லா சாகிதி 74* (102)
வகாப் ரியாஸ் 3/46 (7.4 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 3 இழப்புகளால் வெற்றி
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), ரொட் டக்கர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

24 மே 2019
10:30
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
338/7 (50 நிறைவுகள்)
 இலங்கை
251 (42.3 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 87 (92)
ஆன்டி பெலுக்வாயோ 4/36 (7 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 87 ஓட்டங்களால் வெற்றி
சோபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் வில்சன் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

25 மே 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
297/9 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
285 (49.3 நிறைவுகள்)
ஜேம்சு வின்சு 64 (76)
யேசன் பெரென்டொர்ப் 2/43 (8 நிறைவுகள்)
ஆத்திரேலியா 12 ஓட்டங்களால் வெற்றி
ரோசு பவுல், சவுத்தாம்ப்டன்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), சுந்தரம் ரவி (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

25 மே 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
179 (39.2 நிறைவுகள்)
 நியூசிலாந்து
180/4 (37.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 6 இழப்புகளால் வெற்றி
ஓவல், இலண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

26 மே 2019
10:30
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
95/0 (12.4 நிறைவுகள்)
முடிவில்லை
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் 31 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.

26 மே 2019
10:30
ஓட்டப்பலகை
ஆட்டம் நடைபெறவில்லை
சோபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
  • மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.

27 மே 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
239/8 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
241/5 (44.5 நிறைவுகள்)
லகிரு திரிமான்ன 56 (69)
அடம் சாம்பா 2/39 (9 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இழப்புகளால் வெற்றி
ரோசு பவுல், சவுத்தாம்ப்டன்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), ஜோயெல் வில்சன் (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 மே 2019
10:30
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
160 (38.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
161/1 (17.3 நிறைவுகள்)
முகம்மது நபி 44 (42)
ஜோ ரூட் 3/22 (6 நிறைவுகள்)
யேசன் ரோய் 89* (46)
முகம்மது நபி 1/34 (3 நிறைவுகள்)
இங்கிலாந்து 9 இழப்புகளால் வெற்றி
ஓவல், இலண்டன்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), பவுல் ரைபல் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

28 மே 2019
10:30
ஓட்டப்பலகை
 நியூசிலாந்து
330 (47.2 நிறைவுகள்)
சை ஹோப் 101 (86)
டிரென்ட் போல்ட் 4/50 (9.2 நிறைவுகள்)
டொம் பிளண்டெல் 106 (89)
கார்லொசு பிராத்வைட் 3/75 (9 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 92 ஓட்டங்களால் வெற்றி
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), இயன் கூல்ட் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

28 மே 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
359/7 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
264 (49.3 நிறைவுகள்)
இந்தியா 95 ஓட்டங்களால் வெற்றி
சோபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), பவுல் வில்சன் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
Remove ads

தொடக்க நிகழ்வு

2019 உலகக்கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இலண்டன், த மோல் என்ற இடத்தில் 2019 மே 29 இல் இடம்பெற்றது.[29] இந்நிகழ்வை ஆன்ட்ரூ பிளின்டொஃப், பாடி மெகினசு, சிபானி தண்டேக்கர் ஆகிய பிரபலங்கள் நடத்தினர். உலகக்கிண்ணத்தில் பங்குபற்றும் 10 அணிகளுக்கிடையே 60-செக்கன் சவால் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வோர் அணியும் இரண்டு விருந்தினர்கள் மூலம் போட்டியில் பங்கெடுத்தன. விவியன் ரிச்சர்ட்ஸ், மகேல ஜயவர்தன, ஜாக் கலிஸ், பிறெட் லீ, கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, பர்கான் அக்தார், மலாலா யூசப்சையி, யொகான் பிளேக், தமயந்தி தர்சா, அசார் அலி, அப்துர் ரசாக், ஜேம்ஸ் பிராங்கிளின், இசுட்டீவன் பைனார், கிறிசு இயூசு, சான் பிட்சுபாட்ரிக்கு, பாட் காஷ் ஆகியோர் பங்குபற்றினர். டேவிட் பூன் நடுவராகப் பணியாற்றினார். இங்கிலாந்து 74 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும், ஆத்திரேலியா 69 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்தன.

தற்போதைய வாகையாளரான ஆத்திரேலியாவின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் உலகக்கிண்ண விருதை மேடைக்கு எடுத்துச் சென்றார், இவருடன் இங்கிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் உடன் சென்றார்.

லோரின், ரூடிமெண்டல் ஆகிய குழுவினரால் அதிகாரபூர்வமான உலகக்கிண்ணப் பாடல் இசைக்கப்பட்டு ஆரம்ப நிகழ்வு முடிவுற்றது.[30]

Remove ads

போட்டிகளின் நிலை

மேலதிகத் தகவல்கள் அணி, குழு நிலை ...
Remove ads

குழு நிலை

குழுநிலைப் போட்டிகள் தொடர் சுழல்முறையில் விளையாடப்பட்டன. பத்து அணிகளும் தமக்கிடையே ஒருமுறை மோதின. மொத்தம் 45 ஆட்டங்கள் விளையாடப்பட்டன. ஒவ்வோர் அணியும் 9 ஆட்டங்கள் விளையாடின. குழுநிலையில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன. இதே போன்ற குழுநிலை ஆட்டத்தொடர் 1992 உலகக்கிண்ணத்திலும் இடம்பெற்றது. அப்போது 9 அணிகள் மட்டும் பங்குபற்றியிருந்தன.

புள்ளிகள் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: ஐசிசி, கிரிக்இன்ஃபோ
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சமமான அணிகளுக்கிடையேயான ஆட்டங்களின் முடிவுகள்
(H) நடத்தும் நாடு

குழு நிலைப் போட்டிகள்

2018 ஏப்ரல் 26 இல் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.[31]

மேலதிகத் தகவல்கள் அணி, ஆப்கானித்தான் ...

30 மே 2019
10:30
ஓட்டப்பலகை
 தென்னாப்பிரிக்கா
207 (39.5 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 89 (79)
லுங்கி நிகிதி 3/66 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி
ஓவல் அரங்கு, இலண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இயோன் மோர்கன் (இங்.) தனது 200-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[32] அத்துடன் இவர் 7,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[33]

31 மே 2019
10:30
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
105 (21.4 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
108/3 (13.4 நிறைவுகள்)
பக்கார் சமான் 22 (16)
ஒசேன் தோமசு 4/27 (5.4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 7 இழப்புகளால் வெற்றி
டிரெண்டுப் பாலம், நொட்டிங்காம்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: ஒசேன் தோமசு (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசன் அலி (பாக்) தனது 50-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[34]
  • இது பாக்கித்தானின் 11-வது தொடர் தோல்வியாகும்,[35]
  • உலகக்கிண்ணப் போட்டிகளில் பாக்கித்தான் தனது இரண்டாவது மிகக்குறைந்த ஓட்டங்களைப் பதிவு செய்தது.[36]

1 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
136 (29.2 நிறைவுகள்)
 நியூசிலாந்து
137/0 (16.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 10 இழப்புகளால் வெற்றி
சோபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மாட் என்றி (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யேம்சு நீசம் (நியூ) தனது 50-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[37]
  • திமுத் கருணாரத்ன (இல) உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக விளையாட ஆரம்பித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இரண்டாவது துடுப்பாட்ட வீரராக சாதனை படைத்தார்.[38]

1 சூன் 2019
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
207 (38.2 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
209/3 (34.5 நிறைவுகள்)
நஜிபுல்லா சத்ரான் 51 (49)
பாற் கமின்சு 3/40 (8.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
330/6 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
309/8 (50 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 78 (80)
ஆன்டில் பெலுக்வாயோ 2/52 (10 நிறைவுகள்)
வங்காளதேசம் 21 ஓட்டங்களால் வெற்றி
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இம்ரான் தாஹிர் (தெஆ) தனது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[39]
  • வங்காளதேசம் தனது ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை எடுத்தது.[40]

3 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
348/8 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
334/9 (50 நிறைவுகள்)
ஜோ ரூட் 107 (104)
வகாப் ரியாஸ் 3/82 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 14 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்டுப் பாலம், நொட்டிங்காம்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: முகம்மது ஹஃபீஸ் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யேசன் ரோய் (இங்) தனது 3,000-வது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[41]

4 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
201 (36.5 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
152 (32.4 நிறைவுகள்)
குசல் பெரேரா 78 (81)
முகம்மது நபி 4/30 (9 நிறைவுகள்)
நசிபுல்லா சாத்ரான் 43 (56)
நுவான் பிரதீப் 4/31 (9 நிறைவுகள்)
இலங்கை 34 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
சோபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: நுவான் பிரதீப் (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆப்கானித்தானின் வெற்றி இலக்கு 41 நிறைவுகளில் 187 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • லகிரு திரிமான்ன (இல) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் தனது 3,000 ஆவது ஓட்டத்தைப் பெற்ரார்.[42]

5 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
227/9 (50 நிறைவுகள்)
 இந்தியா
230/4 (47.3 நிறைவுகள்)
கிறிசு மொரிசு 42 (34)
யுவேந்திர சகல் 4/51 (10 நிறைவுகள்)
ரோகித் சர்மா 122* (144)
காகிசோ ரபடா 2/39 (10 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
ரோசு போல், சவுத்தாம்ப்டன்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)

5 சூன் 2019
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
244 (49.2 நிறைவுகள்)
 நியூசிலாந்து
248/8 (47.1 நிறைவுகள்)
சகீப் அல் அசன் 64 (68)
மாட் என்றி 4/47 (9.2 நிறைவுகள்)
நியூசிலாந்து 2 இழப்புகளால் வெற்றி
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ராஸ் டைலர் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்) தனது 200-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[46]

6 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
288 (49 நிறைவுகள்)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 92 (60)
கார்லோசு பிராத்வைட் 3/67 (10 நிறைவுகள்)
சாய் ஹோப் 68 (105)
மிட்செல் ஸ்டார்க் 5/46 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்டுப் பாலம், நொட்டிங்காம்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: நேத்தன் கூல்ட்டர்-நைல் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாற் கமின்சு (ஆசி) தனது 50-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[47]
  • கிறிஸ் கெயில் (மேஇ) உலகக்கோப்பையில் தனது 1,000-வது ஓட்டத்தை எடுத்தார்.[48]
  • ஆன்ட்ரே ரசல் (மேஇ) ஒருநாள் போட்டியில் அதி விரைவான 1,000 ஓட்டங்களை (வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில், 767) எடுத்தார்.[49]

7 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆட்டம் நடைபெறவில்லை
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), நைஜல் லோங் (இங்)
  • நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
  • மழை காரணமாக ஆட்டம் நடத்தப்படவில்லை.

8 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
386/6 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
280 (48.5 நிறைவுகள்)
ஜேசன் ரோய் 153 (121)
மெகதி அசன் 2/67 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 106 ஓட்டங்களால் வெற்றி
சோபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஜேசன் ரோய் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இங்கிலாந்து அடுத்தடுத்த ஏழு பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 30இற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தது.[50]

8 சூன் 2019
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
172 (41.1 நிறைவுகள்)
 நியூசிலாந்து
173/3 (32.1 நிறைவுகள்)
அசுமத்துல்லா சாகிதி 59 (99)
ஜேம்சு நீசம் 5/31 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 7 இழப்புகளால் வெற்றி
கவுண்டி அரங்கு, டோண்டன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), மைக்கேல் கஃப் (இங்)
ஆட்ட நாயகன்: ஜேம்சு நீசம் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யேம்சு நீசம் (நியூ) தனது ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 5 மட்டையாளர்களை ஒரே போட்டியில் வீழ்த்தினார். அத்துடன், தனது ஒருநாள் போட்டிகளில் 50வது மட்டையாளரை வீழ்த்தினார்.[51]

9 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
352/5 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
316 (50 நிறைவுகள்)
ஷிகர் தவான் 117 (109)
மார்க்கசு இசுடொயினிசு 2/62 (7 நிறைவுகள்)
இந்தியா 36 ஓட்டங்களால் வெற்றி
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

10 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
29/2 (7.3 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 17* (21)
செல்டன் கொட்ரெல் 2/18 (4 நிறைவுகள்)
முடிவில்லை
ரோசு பவுல், சௌத்தாம்ப்டன்
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக மேலதிக ஆட்டம் இடம்பெறவில்லை.

11 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆட்டம் நடைபெறவில்லை
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
  • நாணயச் சுழற்சி இடம்பெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடத்தப்படவில்லை.

12 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
307 (49 நிறைவுகள்)
 பாக்கித்தான்
266 (45.4 நிறைவுகள்)
இமாம்-உல்-ஹக் 53 (75)
பாற் கமின்சு 3/33 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 41 ஓட்டங்களால் வெற்றி
கவுண்டி அரங்கு, டோண்டன்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • முகம்மது ஆமிர் (பாக்) தனது பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக ஐந்து மட்டையாளர்களை ஒரே போட்டியில் வீழ்த்தினார்.[52]
  • நேத்தன் கூல்ட்டர்-நைல் (ஆசி) ஒருநாள் போட்டியில் தனது 50வது முறையாக வீர்ரை வீழ்த்தினார்.[53]

13 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆட்டம் நடைபெறவில்லை
டிரெண்டுப் பாலம், நொட்டிங்காம்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), பவுல் ரைபல் (ஆசி)
  • நானயச் சுழற்சி மேற்கொள்ளப்படவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடத்தப்படவில்லை.

14 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
 இங்கிலாந்து
213/2 (33.1 நிறைவுகள்)
நிக்கலாசு பூரன் 63 (78)
மார்க் வுட் 3/18 (6.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 100* (94)
சானன் கப்ரியேல் 2/49 (7 நிறைவுகள்)
இங்கிலாந்து 8 இழப்புகளால் வெற்றி
ரோசு பௌல், சௌத்தாம்ப்ட்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இயோன் மோர்கன் (இங்.) தனது 300-வது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[54]
  • மார்க் வுட் (இங்) தனது பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 50வது மட்டையாளரை வீழ்த்தினார்.[55]

15 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
334/7 (50 நிறைவுகள்)
 இலங்கை
247 (45.5 நிறைவுகள்)
ஆத்திரேலியா 87 ஓட்டங்களால் வெற்றி
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

15 சூன் 2019
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
125 (34.1 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
131/1 (28.4 நிறைவுகள்)
ரஷீத் கான் 35 (25)
இம்ரான் தாஹிர் 4/29 (7 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி (ட/லூ)
சோஃபியா பூங்கா, கார்டிஃப்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: இம்ரான் தாஹிர் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக, தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 48 நிறைவுகளுக்கு 127 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

16 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
336/5 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
212/6 (40 நிறைவுகள்)
பக்கார் சமான் 62 (75)
விஜய் சங்கர் 2/22 (5.2 நிறைவுகள்)
இந்தியா 89 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
பழைய டிரஃபர்டு அரங்கு, மான்செஸ்டர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக பாக்கித்தானின் வெற்றி இலக்கு 40 நிறைவுகளுக்கு 302 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • விராட் கோலி (இந்) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை 222 ஆட்டப்பகுதிகளில் எடுத்து அதிவிரைவு மட்டையாளராக சாதனை படைத்தார்.[56]

17 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
 வங்காளதேசம்
322/3 (41.3 நிறைவுகள்)
சாய் ஹோப் 96 (121)
முசுத்தாபிசூர் ரகுமான் 3/59 (9 நிறைவுகள்)
வாங்காளதேசம் 7 இழப்புகளால்; வெற்றி
கவுண்டி அரங்கு, டோண்டன்
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • முசுத்தாபிசூர் ரகுமான் (வங்) தனது 50-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[57]
  • ஜேசன் ஹோல்டர் (மேஇ) தனது 100வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[58]
  • சிம்ரன் எட்மெயர் (மேஇ) தனது 1,000 ஆவது பன்னாடு ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[59]

18 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
397/6 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
247/8 (50 நிறைவுகள்)
அசுமத்துல்லா சாகிதி 76 (100)
ஜோப்ரா ஆர்ச்சர் 3/52 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றி
பழைய டிராஃபர்ட் அரங்கு, மான்செஸ்டர்
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: இயோன் மோர்கன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இயோன் மோர்கன் உலகக்கிண்ணப் போட்டியொன்றில் மிக விரைவான நூறு எடுத்த ஆங்கிலேய வீரர் (57 பந்துகள்) ஆனார்,[60] மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அதிக எண்ணிக்கையான ஆறடிகளை அடித்த வீரர் (17)[61] ஆகிய சாதனைகளை ஏற்படுத்தினார்.
  • இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான 6-களைப் பெற்றும் (25),[62] உலகக்கிண்ணப் போட்டியொன்றில் அதிக எண்ணிக்கையிலான ஓட்டங்களைப் (397) பெற்றும்[63] சாதனை படைத்தது.
  • ரஷீத் கான் (ஆப்) உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் அதிக எண்ணிக்கையான ஓட்டங்களை விட்டுக்கொடுத்த (110 ஓட்டங்கள்/9 நிறைவுகள்) பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[64][65]

19 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
241/6 (49 நிறைவுகள்)
 நியூசிலாந்து
245/6 (48.3 நிறைவுகள்)
ரசி வான் டெர் டூசென் 67* (64)
லொக்கி பெர்கசன் 3/59 (10 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 106* (138)
கிறிசு மொறிசு 3/49 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 4 இழப்புகளால் வெற்றி
எட்சுபாசுட்டன், பர்மிங்காம்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இரு அணிகளுக்கும் 49 பந்துப் பரிமாற்ரங்கள் தரப்பட்டன.
  • அசீம் ஆம்லா (தெஆ) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் தனது 8,000வது ஓட்டத்தை எடுத்தார்.[66]

20 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
381/5 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
333/8 (50 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 102* (97)
மார்க்கசு இசுட்டொய்னிசு 2/54 (8 நிறைவுகள்)
ஆத்திரேலியா 48 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்டுப் பாலம், நொட்டிங்காம்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இது பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் வங்காளதேசத்திற்கு எதிராக ஆத்திரேலியா பெற்ற அதிகப்படியான ஓட்டங்களாகும் (381).[67]
  • இது பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் வங்காளதேசம் பெற்ற அதிகப்படியான ஓட்டங்கள் ஆகும்.[68]

21 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
232/9 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
212 (47 நிறைவுகள்)
இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றி
எடிங்க்லி, லீட்சு
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மொயீன் அலி (இங்) தனது 100வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[69]
  • லசித் மாலிங்க (இல) தனது உலகக்கிண்ணப் போட்டிகளில் 50வது மட்டையாளரை வீழ்த்தினார். .[70]

22 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
224/8 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
213 (49.5 நிறைவுகள்)
விராட் கோலி 67 (63)
முகம்மது நபி 2/33 (9 நிறைவுகள்)
முகம்மது நபி 52 (55)
முகம்மது சமி 4/40 (9.5 நிறைவுகள்)
இந்தியா 11 ஓட்டங்களால் வெற்றி
ரோசு போல், சௌத்தாம்ப்டன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முகம்மது சமி (இந்) தனது பந்துவீச்சில் மும்முறை வீழ்த்தினார்.[71]
  • உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுக்கு இது 50-வது வெற்றியாகும்.[72]
  • இப்போட்டியின் முடிவை அடுத்து ஆப்கானித்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறியது.[73]

22 சூன் 2019
13:30 (ப/இ)
Scorecard
நியூசிலாந்து 
291/8 (50 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 148 (154)
செல்டன் கோட்ரெல்ல் 4/56 (10 நிறைவுகள்)
கார்லொசு பிராத்வைட் 101 (82)
டிரென்ட் போல்ட் 4/30 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 5 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிரபோர்ட், மான்செஸ்டர்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கார்லொசு பிராத்வைட் (மேஇ) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் நூறைப் பெற்றார்.[74]

23 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
308/7 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
259/9 (50 நிறைவுகள்)
ஹரிஸ் சோகைல் 89 (59)
லுங்கி இங்கிடி 3/64 (9 நிறைவுகள்)
பாக்கித்தான் 49 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஹரிஸ் சோகைல் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டியின் முடிவில் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறியது.[75][76]

24 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
262/7 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
200 (47 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 83 (87)
முஜீப் உர் ரகுமான் 3/39 (10 நிறைவுகள்)
சமியுல்லா சின்வாரி 49 (51)
சகீப் அல் அசன் 5/29 (10 நிறைவுகள்)
வங்காளதேசம் 62 ஓட்டங்களால் வெற்றி
ரோசு போல், சௌதாம்ப்டன்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • உலகக்கோப்பைப் போட்டிகளில் வங்காளதேசத்துக்காக 1,000வது ஓட்டத்தை எடுத்த முதலாவது வீரராக சகீப் அல் அசன் சாதனை புரிந்தார்.[77] அத்துடன், உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் ஐந்து மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது வங்கதேச வீரரும் இவரே.[78]
  • சகீப் அல் அசன் உலககோப்பை போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது வீரராகவும், ஒரு போட்டித் தொடரில் 400 ஓட்டங்கள் எடுத்து 10 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே வீரராகவும் சாதனை புரிந்தார்.[79]

25 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
285/7 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
221 (44.4 நிறைவுகள்)
ஆரன் பிஞ்ச் 100 (116)
கிரிஸ் வோகஸ் 2/46 (10 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 89 (115)
ஜேசன் பெரெண்டோர்ஃப் 5/44 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 64 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜேசன் பெரெண்டோர்ஃப் (ஆசி) தனது ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக ஐந்து மட்டையாளர்களை ஒரே போட்டியில் வீழ்த்தினார் கைப்பற்றினார்.[80]
  • இப்போட்டியின் முடிவை அடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.[81]

26 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
237/6 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
241/4 (49.1 நிறைவுகள்)
யேம்சு நீசம் 97* (112)
சகீன் அஃப்ரிடி 3/28 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 6 இழப்புகளால் வெற்றி
எட்சுபாசுடன், பர்மிங்காம்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: பாபர் அசாம் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாம் பாக்கித்தானுக்காக 3,000 ஓட்டங்களை எடுத்தார்.[82] அத்துடன் அவர் தனது 10வது ஒருநாள் சத்தை எடுத்தார்.[83]

27 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
268/7 (50 நிறைவுகள்)
விராட் கோலி 72 (82)
கேமர் ரோச் 3/36 (10 நிறைவுகள்)
சுனில் அம்பிரிசு 31 (40)
முகம்மது சமி 4/16 (6.2 நிறைவுகள்)
இந்தியா 125 ஓட்டங்களால் வெற்றி
பழைய டிராஃபர்டு, மான்செஸ்டர்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஹர்திக் பாண்டியா (இந்) தனது 50-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[84]
  • இப்போட்டியின் முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறியது.[85]

28 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
203 (49.3 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
206/1 (37.2 நிறைவுகள்)
அவிசுக்கா பெர்னாண்டோ 30 (29)
துவைன் பிரிட்டோரியசு 3/25 (10 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி
ரிவர்சைடு அரங்கு, செசுட்டர்-லெ-ஸ்ட்ரீட்
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: துவைன் பிரிட்டோரியசு (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

29 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
227/9 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
230/7 (49.4 நிறைவுகள்)
இமாத் வசிம் 49* (54)
முகம்மது நபி 2/23 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 3 இழப்புகளால் வெற்றி
எடிங்கிலி, லீட்சு
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), பவுல் வில்சன்(ஆசி)
ஆட்ட நாயகன்: இமாத் வசிம் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

29 சூன் 2019
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
243/9 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
157 (43.4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 86 ஓட்டங்களால் வெற்றி
இலாட்சு, இலண்டன்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: அலெக்சு கேரி (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • டிரென்ட் போல்ட் (நியூ) இந்த உலகக்கிண்ணத் தொடரில் இரண்டாவது முறையாக தன் பந்துவீச்சில் மும்முறை வீழ்த்தினார்.[86][87]

30 சூன் 2019
10:30
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
337/7 (50 நிறைவுகள்)
 இந்தியா
306/5 (50 நிறைவுகள்)
இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றி
எட்ஜ்பாசுட்டன், பர்மிங்காம்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • குல்தீப் யாதவ் (இந்) தனது 50-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[88]
  • இவ்வாட்டம் இரு அணிகளுக்குமிடையே நடந்த 100-வது ஒருநாள் போட்டியாகும்.[89]
  • இப்போட்டியின் முடிவை அடுத்து இலங்கை அணி அரையிறுதியில் விளையாடும் தகுதி பெறத் தவறியது.[90]

1 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
338/6 (50 நிறைவுகள்)
அவிசுக்கா பெர்னாண்டோ 104 (103)
ஜேசன் ஹோல்டர் 2/59 (10 நிறைவுகள்)
நிக்கலாசு பூரன் 118 (103)
லசித் மாலிங்க 3/55 (10 நிறைவுகள்)
இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றி
ரிவர்சைட் அரங்கு, செசுட்டர்-லெ-இசுட்ரீட்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: அவுசிக்கா பெர்னாண்டோ (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது ஒருநாள் நூறைப் பெற்றார்.[91]
  • ஜேசன் ஹோல்டர் 100 மட்டையாளர்களை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகளின் முதலாவது தலைவர் ஆவார்.[92]
  • நிக்கொலாசு பூரன் (மேஇ) தனது முதலாவது ஒருநாள் நூறைப் பெற்றார்.[93]

2 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
இந்தியா 
314/9 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
286 (48 நிறைவுகள்)
இந்தியா 28 ஓட்டங்களால் வெற்றி
எட்சுபாசுட்டன், பர்மிங்காம்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்) உலகக்கோப்பைத் தொடர் ஒன்றில் 500 ஓட்டங்கள் எடுத்து 10 மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது வீரர் ஆனார்.[94]
  • இப்போட்டி முடிவை அடுத்து இந்தியா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. வங்காளதேசம் தொடரில் இருந்து வெளியேறியது.[95]

3 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
305/8 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
186 (45 நிறைவுகள்)
ஜொனாதன் பேர்ஸ்டோ 106 (99)
ஜேம்சு நீசம் 2/41 (10 நிறைவுகள்)
டொம் லேத்தம் 57 (65)
மார்க் வுட் 3/34 (9 நிறைவுகள்)
இங்கிலாந்து 119 ஓட்டங்களால் வெற்றி
ரிவர்சைடு அரங்கு, செசுட்டர்-லெ-இசுட்ரீட்
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டி முடிவை அடுத்து இங்கிலாந்து அரையிறுதில் விளையாடத் தகுதி பெற்றது.[96]

4 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
 ஆப்கானித்தான்
288 (50 நிறைவுகள்)
சாய் ஹோப் 77 (92)
தவ்லத் ஷத்ரன் 2/73 (9 நிறைவுகள்)
இக்ரம் அலிக்கில் 86 (93)
கார்லொசு பிராத்வைட் 4/63 (9 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 23 ஓட்டங்களால் வெற்றி
எடிங்கிலி, லீட்சு
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: சாய் ஹோப் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

5 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
315/9 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
221 (44.1 நிறைவுகள்)
இமாம்-உல்-ஹக் 100 (100)
முசுத்தாபிசூர் ரகுமான் 5/75 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 94 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு, இலண்டன்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்) and ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சகீன் அஃப்ரிடி (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முசுத்தாபிசூர் ரகுமான் (வங்) தனது ஒருநாள் போட்டிகளில் 100-வது மட்டையாளரை வீழ்த்தினார்..[97]
  • இப்போட்டியின் முடிவில் நியூசிலாந்து அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது, பாக்கித்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.[98]

6 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
இலங்கை 
264/7 (50 நிறைவுகள்)
 இந்தியா
265/3 (43.3 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 111 (118)
காசுன் ராஜித்தா 1/47 (8 நிறைவுகள்)
இந்தியா 7 இழப்புகளால் வெற்றி
எடிங்கிலி, லீட்சு
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது ஒருநாள் போட்டிகளில் 100-வது மட்டையாளரை வீழ்த்தினார்.[99]
  • ரோகித் சர்மா (இந்) ஒரே உலகக்கோப்பைத் தொடரில் ஐந்து சதங்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.[100]

6 சூலை 2019
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
325/6 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
315 (49.5 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 122 (117)
காகிசோ ரபாடா 3/56 (10 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 10 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: பிரான்சுவா டு பிளெசீ (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • 1992 இற்குப் பின்னர் முதல் தடவையாக உலகக்கிண்ணப் போட்டியொன்றில் தென்னாப்பிரிக்கா ஆத்திரேலியாவை வென்றது.[101]
  • ஜே பி டுமினி, இம்ரான் தாஹிர் (தெஆ) இருவரும் தமது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினர்.[102]
Remove ads

வெளியேறும் நிலை

வெளியேறும் நிலையில் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இலார்ட்சு அரங்கில் இடம்பெறும் இறுதிப் போட்டியில் பங்கெடுக்கும். ஓல்டு டிராபர்டு, எட்சுபாசுட்டன் ஆகிய அரங்குகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும் என 2018 ஏப்ரல் 25 இல் அறிவிக்கப்பட்டது. 1999 இலும் இங்கு அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.[103]

2019 சூன் 25 இல் ஆத்திரேலியா இங்கிலாந்து அணியை இலார்ட்சில் விளையாடி வென்று முதலாவது அணியாக அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.[104] 2019 சூலை 2 இல் இந்தியா வங்காளதேசத்தை வென்று இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது.[105] சூலை 3 இல் இங்கிலாந்து நியூசிலாந்தை வென்று மூன்றாவது அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[106] சூலை 5 இல், பாக்கித்தான் வங்காளதேசத்துடன் விளையாடி வெற்றி பெற்றாலும், பாக்கித்தான் தமது நிகர ஓட்ட விகிதத்தை அதிகரிக்க முடியாததால், நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.[107]

முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணியை பழைய டிரஃபோர்ட் அரங்கிலும், இரண்டாவது அரையிறுதியில், ஆத்திரேலியா இங்கிலாந்து அணியை எட்சுபாசுட்டன் அரங்கிலும் சந்திக்கின்றன.[108] ஏதாவதொரு அரையிறுதிப் போட்டியில் மேலதிக ஆட்டம் தேவைப்படுமிடத்து, ஆட்டம் இன்னும் ஒரு நாள் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.[109] ஆட்டம் ஒன்று சமமாக முடிவடைந்தால், சிறப்பு நிறைவு என்ற முறை பயன்படுத்தப்படும்.[109] இரண்டு நாட்களிலும் ஆட்டம் நடைபெறவில்லையெனில், குழுநிலையில் அதிக புள்ளிகளை எடுத்த அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.[109]

மழை காரணமாக, இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் 47-வது நிறைவில் இடை நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் சூலை 10 இல் தொடர்ந்தது.[110] நியூசிலாந்து இந்தியாவை 18 ஓட்டங்களால் வென்று, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்தது.[111]

  அரை இறுதி இறுதி
             
9-10 சூலை – ஓல்டு டிராஃபர்டு,
மான்செசுட்டர்
  இந்தியா 221  
  நியூசிலாந்து 239/8  
 
14 சூலை – இலார்ட்சு, இலண்டன்
      நியூசிலாந்து 241/8
    இங்கிலாந்து 241
11 சூலை – எட்சுபாசுட்டன், பர்மிங்காம்
  ஆத்திரேலியா 223
  இங்கிலாந்து 226/2  

அரையிறுதிகள்

9–10 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
239/8 (50 நிறைவுகள்)
 இந்தியா
221 (49.3 நிறைவுகள்)
ரவீந்திர ஜடேஜா 77 (59)
மாட் என்றி 3/37 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 18 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மான்செசுட்டர்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: மாட் என்றி (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முதலாம் நாள், மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் சூலை 10 இல் முதல் நாள் விட்ட இடத்தில் இருந்து தொடரப்பட்டது.
  • மகேந்திரசிங் தோனி (இந்) தனது 350வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[112]
  • நியூசிலாந்து இரண்டாவது தடவையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[113]

11 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
223 (49 நிறைவுகள்)
 இங்கிலாந்து
226/2 (32.1 நிறைவுகள்)
ஜேசன் ரோய் 85 (65)
பாற் கமின்சு 1/34 (7 நிறைவுகள்)
இங்கிலாந்து 8 இழப்புகளால் வெற்றி
எட்சுபாசுட்டன், பர்மிங்காம்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: கிரிஸ் வோகஸ் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • எட்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாடிய ஆத்திரேலியா முதன்முறையாகத் தோற்றது.[114]

இறுதிப் போட்டி

14 சூலை 2019
10:30
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
241/8 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
241 (50 நிறைவுகள்)
என்றி நிக்கல்சு 55 (77)
கிரிஸ் வோகஸ் 3/37 (9 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 84 (98)
ஜேம்சு நீசம் 3/43 (7 நிறைவுகள்)
ஆட்டம் சமமானது
(சிறப்பு நிறைவில் நான்குகள் கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து வெற்றி)

இலார்ட்சு, இலண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • கேன் வில்லியம்சன் (நியூ) ஒரு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ஓட்டங்களை (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் புரிந்தார்.[115]
  • இவ்வாட்டத்தில் விளாசிய நான்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் (26–17) இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. .[116]
  • பன்னாட்டு ஒருநாள் போட்டியொன்றில் முதன்முறையாக சிறப்பு நிறைவு மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார்.[117]
Remove ads

புள்ளிவிவர சிறப்புக் கூறுகள்

அதிக ஓட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் ஓட்டங்கள், ஆட்டவீரர் ...

அதிக வீழ்த்தல்கள்

மேலதிகத் தகவல்கள் வீழ்த்தல்கள், ஆட்டவீரர் ...

தொடரின் அணி

தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு தொடரின் அணி உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் 15 சூலை 2019 நாளன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான தொடரின் அணியை ஐசிசி அறிவித்தது.[120]

மேலதிகத் தகவல்கள் வீரர், பங்கு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads