கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ண பிரசாத் பட்டாராய் (Krishna Prasad Bhattarai) (நேபாளி: कृष्णप्रसाद भट्टराई; 13 டிசம்பர் 1924 – 4 மார்ச் 2011) முடியாட்சிக்குட்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட நேபாள நேபாள மன்னர்களின் 24 வது பிரதம அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.[1] கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தில் ஜனநாயகம் மலருவதற்கு நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதால், பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.[2]
1990ல் ஜனநாயக இயக்கங்களின் தீவிர போராட்டங்களின் விளைவாக, நேபாளத்தில் அரசியல் கட்சிகள் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையும், அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி முறையும் 1990ல் கொண்டுவரப்பட்டது.
கிருஷ்ண பிரசாத் பட்டாராய் நேபாளி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேபாள பிரதம அமைச்சராக, 19 ஏப்ரல் 1990 முதல் 26 மே 1991 முடியவும், பின்னர் 31 மே 1999 முதல் 22 மார்ச் 2000 முடியவும் இரண்டு முறை பதவி வகித்தவர்.
பட்டாராய் நேபாள காங்கிரஸ் கட்சியின் அலுவல் தலைவராக, 12 பிப்ரவரி 1976 முதல் 16 ஆண்டுகள் இருந்தவர். பின்னர் 1992 முதல் 1996 முடிய நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர்.
இவர் தமது 87வது அகவையில் உடல்நலக் குறைவின்மையால் காட்மாண்டுவில் காலமானார். [3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads