கிருஷ்ண விஜயம்
சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ண விஜயம் (Krishna Vijayam) 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[2] சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, ஏ. எல். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3]
Remove ads
திரைக்கதை
திருமாலின் கிருஷ்ண அவதாரம் பற்றிய கதை. ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு, அவர் தனது மாமனாகிய அரசன் கம்சனை அழித்தது, சிறுவனாக அவர் கோபியர்களுடனும் நண்பர்களுடனும் நடத்திய விளையாட்டுகள் பற்றியதே இத்திரைப்படமாகும்.[3]
நடிகர்கள்
இந்தப் பட்டியல் தி இந்து நாளிதழ் கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.[3]
- என். சி. வசந்தகோகிலம் - நாரதர்
- பி. வி. நரசிம்ம பாரதி - ஸ்ரீ கிருஷ்ணன்
- டி. பிரேமாவதி - ராதை
- ஆர். பாலசுப்பிரமணியம்
- ஏ. எல். ராகவன் - பால கிருஷ்ணன்
- லட்சுமிபிரபா
- எம். ஆர். சந்தானம்
- கே. எஸ். அங்கமுத்து - கோபிகை
- அண்ணாஜி ராவ்
- சி. வி. வி. பந்துலு
- எஸ். ஏ. நடராஜன்
- எம். கே. முஸ்தபா
- சாய்ராம்
- சாண்டோ சின்னப்பா தேவர்
- எம். எஸ். எஸ். பாக்கியம்
- லட்சுமிகாந்தா
நடனம்:
Remove ads
தயாரிப்புக் குழு
இப் பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[1]
- தயாரிப்பாளர்கள்: எம் சோமசுந்தரம், மொஹிதீன்
- இயக்குநர்: சுந்தர் ராவ் நட்கர்ணி
- கதை: சுந்தர் ராவ் நட்கர்ணி
- வசனம்: வேலவன், கர்மயோகி
- ஒளிப்பதிவு: பி. இராமசாமி
- கலை: பி. பி. சௌத்ரி, குட்டியப்பு
- தொகுப்பு: சுந்தர் ராவ் நட்கர்ணி, பி. வெங்கடாசலம்
- நடன ஆசிரியர்: கே. ஆர். குமார், சி. தங்கராஜ்
- ஒளிப்படம்: கே. ஆனந்தன்
- படப்பிடிப்பு நிலையம்: சென்ட்ரல் ஸ்டுடியோஸ், கோவை
பாடல்கள்
திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள்; சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோர். பாடல்களை இயற்றியோர்: பாபநாசம் சிவன், டி. கே. சுந்தர வாத்தியார், பூமி பாலகதாஸ், கே. பி. காமாட்சி ஆகியோர். என். சி. வசந்தகோகிலம் பாடிய நவநீத கண்ணனே .. என்ற பாடல் பிரபலமானது. இந்தப் பாடலை இயற்றியவர் கே. பி. காமாட்சி. இசையமைத்தவர் சி. எஸ். ஜெயராமன். என்னடி அநியாயம் இது.. என்ற குழுப்பாடலும் பிரபலமானது. இப்பாடலை பி. லீலா, கே. வி. ஜானகி, டி. வி. ரத்தினம், டி. ஆர். பாகீரதி குழுவினருடன் பாடியிருந்தனர்.[3]
Remove ads
வரவேற்பு
இத்திரைப்படம் இனிமையான இசையுடன் நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தது. ஆயினும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இக்கால கட்டத்தில் ரசிகர்களுக்குப் புராணப் படங்களிலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கியிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. ஜூபிடர் நிறுவனத்தார் இதற்கு முன் வேலைக்காரி என்ற சமூகத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தனர். அத் திரைப்படம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads