சுந்தர் ராவ் நட்கர்ணி
இந்தியத் திரைப்பட இயக்குனர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுந்தர் ராவ் நட்கர்ணி (Sundar Rao Nadkarni) ஓர் இந்திய திரைப்பட நடிகரும், திரைக்கதை ஆசிரியரும், ஒளிப்பதிவாளரும், திரைப்படத் தயாரிப்பாளர்|தயாரிப்பாளரும்]], இயக்குநரும் ஆவார். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 1940ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான "பூகைலாஷ்" என்ற முதல் வெற்றிப் படத்தின் இயக்குநராக இருந்தார். பின்னர் 1944 ஆம் ஆண்டு வெளிவந்து சாதனைப்படைத்த ஹரிதாஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சுந்தர் ராவ் நட்கர்ணி மங்களூரில் ஒரு கொங்கணி பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[1] சூர்யா பிலிம்ஸ் தயாரித்த ஊமைத் திரைப்படங்களில் நடிகராக பெங்களூரில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், மும்பைக்கு சென்று, திரைப்பட இயக்கத்திலும், படத்தொகுப்பிலும் ஈடுபட்டார். அப்போது வெளியான சபாபதியின் வெற்றிக்குப் பிறகு, மற்றொரு நகைச்சுவைத் திரைப்படத்தை உருவாக்க முயன்று வந்த ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் கண்ணில் பட்டார். அதன் பிறகு, இவர் கோயம்புத்தூரிலும், இறுதியாக சென்னையிலும் நிரந்தரமாக குடியேறினார்.
1942ஆம் ஆண்டில், என் மனைவி என்ற தமிழ்த் திரைப்படத்தை இயக்கினார். இதன் வெற்றியைத் தொடர்ந்து, நட்கர்ணி மற்ற வெற்றிகரமான தமிழ் படங்களையும் இயக்க ஆரம்பித்தார். 1944இல் வெளிவந்த "ஹரிதாஸ்" இவரது மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இது ஒரு திரையரங்கில் 110 வாரங்கள் ஓடிய முதல் தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. இவர் பல சிறந்த தமிழ் நடிகர்களை இயக்கியுள்ளார். குறிப்பாக "ஹரிதாஸ்" (1944) படத்தில் தியாகராஜ பாகவதர், டி. ஆர். ராஜகுமாரி போன்றோரையும், கிருஷ்ண விஜயம் (1950) படத்தில் பி. வி. நரசிம்ம பாரதியையும், மகாதேவி (1957) படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், சாவித்திரி ஆகியோரையும் இயக்கியிருந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads