கில்ஜித் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கில்ஜித் மாவட்டம்map
Remove ads

கில்ஜித் மாவட்டம் (Gilgit District), இந்தியாவின் காஷ்மீரின் வடக்குப் பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கில்ஜித் நகரம். காரகோரம்மலைத்தொடர்களால் சூழ்ந்த இம்மாவட்டத்தில் உலகின் ஒன்பதாவது உயரமான திஸ்தகில் சார் சிகரம் 7,885 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பாக்ரோர் சமவெளி, ஜுக்லோத் சமவெளி, தான்யோர் சமவெளி, நோமல் சமவெளிகள் உள்ளது. 4,208 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 290,000 ஆகும்.

விரைவான உண்மைகள் கில்ஜித் மாவட்டம் ضلع گلگت, நாடு ...
Thumb
கில்ஜித் மாவட்டத்தின் ஹராமோஷ் மலையின் நீரோடைகளில் கிடைக்கும் பச்சை நிற பெரிய படிகக்கற்கள்
Remove ads

மாவட்ட நிர்வாகம்

கில்ஜித் மாவட்டம் மூன்று தாலுகாக்களைக் கொண்டது. அவைகள்:

  • தான்யோர் தாலுகா
  • கில்ஜித் தாலுகா
  • ஜுக்லோத் தாலுகா

அமைவிடம்

கில்ஜித் மாவட்டத்தில் வடக்கில் நாகர் மாவட்டம், கிழக்கில் சிகார் மாவட்டம் மற்றும் ரோண்டு மாவட்டம், தெற்கில் தாங்கிர் மாவட்டம், தயமர் மாவட்டம் மற்றும் ஆஸ்தோர் மாவட்டம், மேற்கில் கீசெர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads