காரகோரம்
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லையில் பரந்து விரிந்திருக்கும் பெரிய மலைத்தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரகோரம் (Karakoram) என்பது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது இமாலய மலைக்கு வடக்கே அமைந்துள்ளது. இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி இல்லை.
உலகில் எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடி என்பது இம்மலைத் தொடரில்தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கி.மீ. (300 மைல்) நீளமுடையது. இப்புவியில் வடமுனை, தென்முனை தவிர்த்து மிகுந்த அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம் ஆகும். 70 கி.மீ. நீளமுள்ள சியாச்சென் பனியாறு 63 கி.மீ. நீளமுள்ள பியாபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. புவி வெப்பமாதலால் இமாலயப் பனியாறுகள் உருகி வரும் நிலையில் காரகோரத்துப் பனியோ இறுகி வருவதாக அறியப்பட்டுள்ளது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads