கிழக்கு ருக்கும் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு ருக்கும் மாவட்டம் (East Rukum) (நேபாளி: पूर्वी रुकुम), நேபாளத்தின் மேற்கில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ளது. [1] மேலும் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.

கிழக்கு ருக்கும்கோட் மாவட்டத்தின் தற்காலிகத் தலைமையிடம் ருக்கும்கோட் நகரம் ஆகும்.[2]
நிர்வாக வசதிக்காக முந்தைய ருக்கும் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு மேற்கு ருக்கும் மாவட்டம் மற்றும் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு ருக்கும் மாவட்டங்களை 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக நிறுவப்பட்டது.
161.13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிழக்கு ருக்கும்கோட் மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 53,018 ஆகும்.[1] [3]
Remove ads
மாவட்ட எல்லைகள்
கிழக்கு ருக்கும் மாவட்டத்தின் வடக்கில் டோல்பா மாவட்டம், கிழக்கில் மியாக்தி மாவட்டம் மற்றும் பாகலுங் மாவட்டம், தெற்கில் ரோல்பா மாவட்டம் மற்றும் மேற்கில் மேற்கு ருக்கும் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 3 கிராமிய நகராட்சி மன்றங்களையும், தோர்பட்டான் எனும் பெரும் பரப்புடைய காப்புக் காடுகளும் கொண்டது.[1] [4] [3]. இம்மாவடடத்தில் நகர்புற நகராட்சிகள் இல்லை.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads