நேபாள நகரங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேபாள நகரங்களை மக்கள் தொகை, ஆண்டு வருவாய் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள், நகர்புற நகராட்சிகள், கிராமிய நகராட்சிகள் என நான்கு அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச், 2017ல், நேபாள நாட்டின் நகரங்களை, 4 மாநகராட்சிகளாகவும்; 13 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] 1 சூன் 2017ல் விராட்நகர் மற்றும் வீரகஞ்ச் துணை-மாநகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயரத்தப்பட்டதால், தற்போது நேபாளத்தில் 6 மாநகராட்சிகளும், 11 துணை-மாநகராட்சிகளும் உள்ளது. [2][3]
பரப்பளவில் 464.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் கூடிய பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி முதலிடத்திலும், 36.12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் லலீத்பூர் மாநகராட்சி நான்காம் இடத்திலும் உள்ளது. துணை-மாநகராட்சிகளில் கோரக்கி துணை-மாநகராட்சி 522.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,56,154 மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. [4]
Remove ads
நகர்புற நகராட்சிகளின் வகைப்பாடுகள்
மக்கள் தொகை, கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள், தொலைதொடர்பு வசதிகள், விளையாட்டு அரங்கங்கள், போக்குவரத்து சாலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், நேபாள அரசு, நகர்புற நகராட்சி மன்றங்களை மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள் மற்றும் நகர்புற நகராட்சிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கான தகுதிகள்
ஒரு மாநகராட்சி கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்:
- குறைந்தபட்ச மக்கள் தொகை 2,80,000 கொண்டிருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 40 கோடி நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
- மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
- முதன்மைச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலை வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
- மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் வசதிகள் இருத்தல் வேண்டும்.
- பன்னாட்டு விளையாட்டரங்க கட்டமைப்புகள் கொண்டிருக்க வேண்டும்.
- உயர் கல்வி வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாவது இருத்தல் வேண்டும்.
துணை-மாநகராட்சிகள்
ஒரு துணை-மாநகராட்சி நகரம் கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்ச மக்கள் தொகை 1,50,000
- குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 10 கோடி நேபாள ரூபாய் இருத்தல் வேண்டும்.
- மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் இருக்க வேண்டும்.
- இணைப்புச் சாலைகள் முக்கிய சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கல்லூரிகள் மற்றும் மருத்துவ சேவைகள் கொண்டிருக்க வேண்டும்.
- தேசிய, பன்னாட்டு விளையாட்டரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.
- தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள், கலையரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.
நகர்புற நகராட்சிகள்
நகர்புற நகராட்சிகள் குறைந்தபட்சமாக கீழ்கண்ட தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.
- சமவெளியில் மக்கள் தொகை 20,000 ஆகவும், மலைப்பகுதிகளில் மக்கள் தொகை 10,000 என இருத்தல் வேண்டும்.
- ஆண்டு வருவாய் 40 இலட்சம் நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
- மின்சாரம், சாலை வசதிகள், குடிநீர், தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
Remove ads
உள்ளாட்சி தேர்தல், 2017
நேபாளத்தின் 6 மாநகராட்சிகளுக்கும், 11 துணை-மாநகராட்சிகளுக்கும், 246 நகர்புற நகராட்சிகளுக்கும் 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 என மூன்று நாட்களில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[5] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[6] [7]
நேபாள நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்
மாநகராட்சி மன்றங்கள் (महानगरपालिका)
துணை-மாநகராட்சிகள் (उप-महानगरपालिका)
நகர்புற நகராட்சிகள் (नगरपालिका)
மக்கள் தொகை 1,00,000 +
மக்கள் தொகை 75,000 +
மக்கள் தொகை 50,000 +
மக்கள் தொகை 25,000 +
மக்கள் தொகை 5,000 +
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads