பாகலுங் மாவட்டம்
நேபாளத்தின் கண்டகி பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாகலுங் மாவட்டம் (Baglung District) (நேபாளி: बागलुङ जिल्ला ⓘ), நேபாளத்தின் கண்டகி மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைநகரம் காளி கண்டகி ஆற்றின் கரையில் உள்ள பாகலுங் என்ற நகரம் ஆகும்.

இம்மாவட்டம் 1,784 சதுர கிலோ மீட்டரும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,68,613 மக்கள் தொகையும் கொண்டது. [1]
Remove ads
கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்

பாகலுங் மாவட்டம் 59 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் கொண்டது. உயர்ந்த மலைப்பாங்கான பாகலாங் மாவட்டத்தில் பல மலை ஆறுகளையும், தொங்கும் பாலங்களையும் கொண்டது. இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். புன், தாபா, ராணா, மகர், செத்திரி, பிராமணர், நேவார் மக்கள், குரூங் மற்றும் தகாளி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
இம்மலை மாவட்டத்தில் மூலிகைச் செடிகள், நெல், சோளம், கோதுமை மற்றும் உருளைக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.
Remove ads
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
பாகலுங் மாவட்டத்தின் கோடை கால அதிக பட்ச வெப்பம் 37.5 பாகை செல்சியஸ் ஆகவும், குளிர் கால குறைந்த பட்ச வெப்பம் -15 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்திலிருந்து 4,300 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவி உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads