கிழக்கு வாசல்
ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு வாசல் என்பது ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், ரேவதி, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறந்த வெற்றிப்படமான இது சென்னையில் 150 நாட்களைக் கடந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 100 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. நடிகர் கார்த்திக் தமிழ்த் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள இப்படமே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[1]
Remove ads
நடிகர்கள்
- கார்த்திக் – பொன்னுரங்கம்
- ரேவதி – தாயம்மா
- குஷ்பூ – செல்வி
- சின்னி ஜெயந்த் – மாக்கான்
- மனோரமா
- விஜயகுமார்
- ஜனகராஜ்
- சண்முகசுந்தரம்
- தியாகு
- சுலக்சனா
- எஸ். என். பார்வதி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
மீளுருவாக்கங்கள்
பாடல்கள்
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. ரேவதி தோன்றும் பாடலான வந்ததே ஓ குங்குமம் பாடல் மோகன ராகத்தில் உருவானதாகும். இப்பாடலை பாடிய புகழ்பெற்ற பாடகி சித்ரா சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார்.
விருதுகள்
- 1990 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads