கல்லாப்பெட்டி சிங்காரம்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்லாப்பெட்டி சிங்காரம் (Kallapetti Singaram; 12 சூன் 1938 – 15 ஏப்ரல் 1990) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் கே. பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார். மோட்டார் சுந்தரம்பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவர் சொந்தமாக நாடகக்குழு வைத்து பல நாடகங்களை மேடையேற்றியவர்.[1][2]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
கல்லாப்பெட்டி சிங்காரம் நாடகக் குழுவொன்றை சொந்தமாக வைத்து பல நாடகங்களை நடத்தினார். பாக்யராஜ் சிங்காரமுடன் அறிமுகமானபோது, இவரது வெளிப்படையான நடிப்பு, நடை, உடல் மொழி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். பின்னர், பாக்யராஜ் இயக்குநரான போது, சிங்காரத்திற்கு தனது படங்களில் நடிக்க பல வாய்ப்புகளை வழங்கினார்.
திரைப்பட வாழ்க்கை
பாக்யராஜ் முதன்முதலில் சிங்காரத்தை சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். 1966 ஆம் ஆண்டு வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற திரைப்படத்தில் சிங்காரம் ஏற்கனவே ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். பாக்யராஜின் பல படங்களில் சிங்காரம் சிறு வேடங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், நிறைய குறிப்பிடத்தக்க திரைப்படப் காட்சிகளை இயக்குநர் பாக்யராஜ் மட்டுமே இவருக்குக் கொடுத்தார்.[3]
Remove ads
இறப்பு
கல்லாப்பெட்டி சிங்காரம் கடைசியாக நடித்த கிழக்கு வாசல், திரைப்படப் படப்பிடிப்பின் போது 1990 ஏப்ரல் 15 அன்று தனது 52-ஆவது அகவையில் இறந்தார்.[3]
நடித்த திரைப்படங்கள்
- 1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை
- 1966- அத்தை மகள்
- 1967- நான் யார் தெரியுமா
- 1973- மறுபிறவி
- 1975- எடுப்பார் கைப்பிள்ளை
- 1976- குமார விஜயம்
- 1979- சுவர் இல்லாத சித்திரங்கள்
- 1980- ஒரு கை ஓசை
- 1980- பாமா ருக்மணி
- 1981- இன்று போய் நாளை வா
- 1981- ஒருத்தி மட்டும் கரையினிலே
- 1981- மௌன கீதங்கள்
- 1981- அந்த 7 நாட்கள்
- 1981- சிம்ம சொப்பனம்
- 1981- பொன்னழகி
- 1982- டார்லிங், டார்லிங், டார்லிங்
- 1982- இராகம் தேடும் பல்லவி
- 1982- இளஞ்சோடிகள்
- 1983- ஆனந்த கும்மி
- 1983- வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்
- 1984- குடும்பம்
- 1984- மைடியர் குட்டிச்சாத்தான்
- 1984- பூவிலங்கு
- 1984- ஓசை
- 1984- தராசு
- 1985- சாவி
- 1985- கரையை தொடாத அலைகள்
- 1985- காக்கிசட்டை
- 1985- உதயகீதம்
- 1986- மருமகள்
- 1987- ௭ங்க ஊரு பாட்டுக்காரன்
- 1987- மக்கள் என் பக்கம்
- 1987- ராஜ மரியாதை
- 1987- வீர பாண்டியன்
- 1987- நினைக்க தெரிந்த மனமே
- 1988- கதாநாயகன்
- 1988- கோயில் மணியோசை
- 1990- கிழக்கு வாசல்
- 1990- என் காதல் கண்மணி
- 1990- பெரியவீட்டுப் பண்ணக்காரன்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads