கி. கிருஷ்ணமூர்த்தி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிருஷ்ணசாமி கிருஷ்ணமூர்த்தி (சூலை 1, 1944 - சனவரி 16, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் கி. கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

இவர் சூலை 1, 1944 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

அரசியல்

இவர் 1984 முதல் 1988 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றினார். 1998 இல், மயிலாடுதுறை மக்களவை தொகுதியிலிருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.

குடும்பம்

இவர் மல்லிகா என்பவரை செப்டம்பர் 8, 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads