குஜராத் நிலநடுக்கம் 2001

இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் From Wikipedia, the free encyclopedia

குஜராத் நிலநடுக்கம் 2001
Remove ads

2001 குஜராத் நிலநடுக்கம் (2001 Gujarat earthquake), 26 சனவரி 2001 அன்று, இந்தியாவின் 52ஆவது குடியரசு நாளன்று, குசராத்து மாநிலத்தில், காலை 8.46 மணியளவில், இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், பசாவ் வருவாய் வட்டத்தின் சோபாரி கிராமத்தில், நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.[5] 7. 7 ரிக்டர் அளவில் பதிவான இந்நில நடுக்கத்தினால், கட்ச் மாவட்டத்தில் 13,805 முதல் 20,023 மக்கள் வரை பலியாயினர். 1,67,000 மக்கள் படுகாயம் அடைந்தனர். 4,00,000 இலட்சம் வீடுகள் தரைமட்டம் ஆயின.[6]

விரைவான உண்மைகள் நாள், தொடக்க நேரம் ...
Thumb
2001 நில நடுக்க நினைவுத் தோட்டம், புஜ், குசராத்து
Remove ads

சேதங்கள்

கட்ச் மாவட்டத்தில் மட்டும் 12,300 மக்கள் பலியாயினர். நில நடுக்க மையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கட்ச் மாவட்டத்தின் புஜ் நகரம் மற்றும் பசாவ், அஞ்சர் பகுதியிலிருந்த கிராமங்களில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டம் ஆயின.[7]

இப்பகுதியின் நாற்பது விழுக்காடு வீடுகள், எட்டு பள்ளிக் கட்டிடங்கள், இரண்டு மருத்துவ மனைகள் மற்றும் சுவாமி நாராயாணன் மந்திர் (புஜ்), மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பிராக் அரண்மனை, ஐனா அரண்மனை முற்றிலும் சேதமடைந்தது.

அகமதாபாத் நகரத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் கடும் சேதமடைந்து, பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மொத்த சேதத்தின் மதிப்பு 5.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads